டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: நடந்தது என்ன?
Delhi CM Attacked: இன்று காலை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டிருந்த போது அவர் மீது இந்த தாக்குதல் நடந்தது. முழு விவரத்தை இங்கே காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Delhi CM Attacked: இன்று காலை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டிருந்த போது அவர் மீது இந்த தாக்குதல் நடந்தது. முழு விவரத்தை இங்கே காணலாம்.
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா ஊக்குவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். எனவே, கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இதை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இதனிடையே, ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு … Read more
தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மட்டும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு: தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக உயிருக்குப் போராடிய தாவனகேரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். சாஸ்திரி லேஅவுட்டைச் சேர்ந்த கதீரா பானு எனும் 4 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 27 அன்று தனது வீட்டுக்கு வெளியே விளையாடும்போது தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். சிறுமியின் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நாய் பலமாக கடித்தது. தொடக்கத்தில் அவருக்கு தாவனகேரில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் … Read more
புதுடெல்லி: ‘ஜெகதீப் தன்கர் எங்கே?’ என்ற கேள்வி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஏற்படுத்தி வரும் அதிர்வலைகள் குறித்து பார்ப்போம். மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் அனல் பறப்பது இயல்பானது. ஆனால், முதன்முறையாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பரபரப்புகளுடன் நடக்கப்போவது இதுவே முதன்முறை என்று சொல்லும் அளவுக்கு, அதன் பின்னணியில் அத்தனை கேள்விகள், சூட்சமங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. ஜெகதீப் தன்கர், கடந்த … Read more
புதுடெல்லி / ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் … Read more
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்பு பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க … Read more
புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என்றும், இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, “இது சித்தாந்தங்களுக்கு இடையேயான … Read more
மும்பை: மும்பையில் கனமழை பொழிந்து வரும் நிலையில் மின் தடை காரணமாக நடுவழியில் மோனோரயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பாதிக்கப்பட்டது. இதனால் அதில் பயணித்த சுமார் 400 பயணிகள் செய்வதறியாது தவித்தனர். தற்போது அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மின் தடை காரணமாக மோனோரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக மும்பை பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் தங்களது பராமரிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. “மழை காரணமாக ஹார்பர் … Read more
அமராவதி: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு ரூ.140 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்கம் வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் மங்களகிரியில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 121 கிலோ தங்கம் வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி. அவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். எனவே, என்னால் … Read more