அகமதாபாத் விமான விபத்து: நடந்தது என்ன?; அடுத்தது என்ன? – மத்திய அமைச்சர் முழு விளக்கம்

Ahmedabad Plane Crash: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன. இதையடுத்து, விபத்து நடந்த இடங்களில் சிதறி உள்ள உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த பாகங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் பலர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி … Read more

NEET UG: வெளியான நீட் தேர்வு முடிவுகள்… ரிசல்ட், Answer Key டவுன்லோட் செய்வது எப்படி?

NEET UG 2025 Result: 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. நீட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

கனவுகள் கலைந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள் – அகமதாபாத் விமான விபத்து பெருந்துயர்

அகமதாபாத்: அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன. குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மட்​டுமே உயிர்​பிழைத்​தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவு​கள் கலைந்து அவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீள முடி​யாத சோகத்​துக்​குச் சென்​றுள்​ளனர். விபத்​தில் ராஜஸ்​தானைச் சேர்ந்த 10 பேர் இறந்​தனர். அதில் 5 பேர் ஒரே … Read more

போயிங் விமான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவரின் முந்தைய பதிவுகள் வைரல்

புதுடெல்லி: போ​யிங் விமானங்​களில் பாது​காப்பு குறை​பாடு​கள் இருப்​பதை ஏற்​கெனவே சுட்​டிக்​காட்​டிய ஜான் பார்​னெட் என்​பவரின் முந்​தைய கருத்​துகள் பொது​வெளி​யில் வைரலாகி வரு​கின்​றன. 1962 பிப்​ர​வரி 23-ல் கலிபோர்​னி​யா​வில் பிறந்​தவர் ஜான் பார்​னெட். பெற்​றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்​றும் மூன்று சகோதரர்​களு​டன் லூசி​யா​னா​வுக்கு குடிபெயர்ந்​தார். நாசா​வின் விண்​வெளி ஓடத் திட்​டங்​களில் பணி​யாற்​றிய​வர். பின்​னர் 2010 மற்​றும் 2017-க்கு இடை​யில் வடக்கு சார்​லஸ்​டன் போ​யிங் ஆலை​யில் தரக்​கட்​டுப்​பாட்டு மேலா​ள​ராக பணிபுரிந்​தார். அப்​போதே அவர் போ​யிங் நிறு​வனத்​தில் … Read more

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய விமானத்தின் வீடியோ ரெக்கார்டர் மீட்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர் நேற்று மீட்டனர். அனைத்து விமானங்களிலும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்று இருக்கும் இந்த சாதனத்தில், விமானத்தின் செயல்பாடு, பயணிகள் இருக்கும் பகுதி, விமானத்தின் வெளிப்புற பகுதி ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவாகும். விமான விபத்து நடந்த இடத்தில், … Read more

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ராஜா ரகுவன்சியை கொல்ல 3 முறை முயற்சி – போலீஸார் அதிர்ச்சி தகவல்

ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கணவனை கொலை செய்ய அவர் ஏற்கெனவே மூன்று முறை முயற்சித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், நான்காவது முயற்சியில் கணவரின் கதையை திட்டமிட்டபடி அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து முடித்துள்ளார் இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த … Read more

தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்; போயிங் நிறுவனத்துக்கு நெருக்கடியா?

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ … Read more

விஜய் ரூபானியின் கடைசி புகைப்படமும், மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த துயரமும்

இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் எதிர்கால கனவுகளை தீக்கிரையாக்கியது துரதிருஷ்டவசமான விமான விபத்து. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சக … Read more

கீழடி அறிக்கையை வெளியிட தமிழக வரலாற்றாளர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கீழடி தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட தமிழகத்தின் வரலாற்றாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறை தலைவரும், செனட் உறுப்பினருமான பேராசிரியர் சுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாய்வு அறிக்கையை அறிவியல் பூர்வமான ஆய்விற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார். கீழடியில் ஆய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிவியல் பூர்வமான ஆதாரம் என்பது காலதாமதமே. இனியும் தாமதப்படுத்தாமல் ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு … Read more