பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் எம்.பி.க்கு தொடர்பு: 4 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை

மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மகாராஷ்டிர எம்.பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண் மருத்துவர் எழுதியுள்ள 4 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். மகா​ராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்​டத்தை சேர்ந்த பெண் மருத்​து​வர் ஒரு​வர் சதாரா மாவட்​டம் பால்​டன் பகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி வந்தார். 3 நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்டார். தனது மரணத்​துக்கு போலீஸ் சப்-இன்​ஸ்​பெக்​டர் கோபால் பதானே காரணம் எனவும், … Read more

பேருந்து தீப்பிடித்ததற்கு 400 செல்போன்களும் காரணம்? – தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கர்னூல்: கர்னூலில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 400 செல்போன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேக்கூரு கிராமம் அருகே நேற்று முன்தினம் அகிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது, பேருந்து மோதியதில் பைக்கில் இருந்தவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பைக் பேருந்தின் அடியில் … Read more

மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர தரவுகளில் தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய கல்வி ஆண்டினை காட்டிலும் 38 சதவீதம் … Read more

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் – அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்?

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் … Read more

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 15 ஏக்கரை தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதா? – அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை ‘பிரிகேட்’ என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி குடும்ப ஆதிக்கத்தை வளர்க்க நினைக்கும் மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 2006-2011 மைனாரிட்டி திமுக ஆட்சியின்போது … Read more

திரும்பப் பெறப்பட்ட தனியார் பல்கலை. சட்டத் திருத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை: தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம் குறித்து மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அண்மையில் நடந்த சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு … Read more

ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 5 சிறுவர்களுக்கு எச்ஐவி தொற்று: ஜார்க்கண்டில் மருத்துவ அலட்சியம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 5 சிறுவர்களுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது ரத்த பரிசோதனையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் இந்த சிறுவர்களுக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது செலுத்தப்பட்டது இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள சாய்ப்பாசா டவுனில் அமைந்துள்ள சதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 7 வயதான தங்களின் குழந்தைக்கு … Read more

தபால் துறையில் வேலை.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Post Office Recruitment: இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகுறித்த கூடுதல் விவரங்கள் இங்கு விரிவாக பார்ப்போம்.   

'வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும்' – 'மனதின் குரலில்' பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை அன்று வானொலி​யில் மனதின் குரல் என்ற நிகழ்ச்​சி​யில் நாட்டு மக்​களு​டன் உரை​யாடி வரு​கிறார். அதன்​படி 126-வது மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி இன்று பேசியிருந்தார். தனது 30 நிமிட உரையில் அவர் பேசியதாவது: “மனதின் … Read more

பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! வரப்போகும் அதிரடி மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!

விலை உயர்ந்த, அதிக திறன் கொண்ட பிரீமியம் பைக்குகளில் மட்டுமே ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு வந்தது.  இனி அனைத்து விதமான பைக்குகளில் இடம் பெற உள்ளது.