திரவுபதி முர்முவின் சபரிமலை வழிபாடு குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் சர்ச்சை பதிவு: பாஜக கண்டனம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், “உயர் நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலின் வழக்கங்களை வெளிப்படையாக மீறிவிட்டார். இந்த மரபு மீறலுக்கு சீருடையில் இருந்த … Read more