கேரளா ஸ்த்ரீ சக்தி SS-487 லாட்டரி குலுக்கல் முடிவுகள்! வெற்றி எண்கள், பரிசு விவரங்கள்..

Sthree Sakthi SS-487 Lottery Result: இன்று கேரளா மாநில லாட்டரி துறை திருவனந்தபுரத்தில் ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 487 (Sthree Sakthi SS-487) லாட்டரி முடிவுகளை அறிவிக்க உள்ளது. மேலும் ஓணம் பம்பர் லாட்டரி முடிவு அக்டோபர் 4-க்கு மாற்றப்பட்டுள்ளது.

ராகுலுக்கு கொலை மிரட்டல்: பாஜகவுக்கு 3 கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்

புதுடெல்லி: ராகுல் காந்​திக்கு கொலை மிரட்​டல் விடுத்​ததாக காங்​கிரஸ் கட்சி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இதையடுத்​து, பாஜக​வுக்கு காங்​கிரஸ் 3 முக்​கிய கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் கட்சி எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: தொலைக்​காட்சி விவாதத்​தின்​போது பாஜகவைச் சேர்ந்த பிந்து மகாதேவ், ராகுல் காந்​திக்கு வெளிப்​படை​யாக கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளார். முதலா​வ​தாக, இது மக்​கள் தலை​வர் ராகுல் காந்திக்கு எதி​ராக தீட்​டப்​படும் ஒரு மிகப்​பெரிய தீய சதி திட்​ட​மா? இரண்​டாவது, மிரட்​டல், வன்​முறை, கொலை மிரட்​டல் வழி​யான அரசி​யலை பாஜக … Read more

‘ஐ லவ் முகமது’ சர்ச்சை தேவையில்லை: மவுலானா ஷகாபுதீன் வலியுறுத்தல் 

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற பதாகை எடுத்து செல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து பரேலியில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரேலியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தி வெளிப்பாடு தனிப்பட்டதாக இருக்க வேண்டும். தெருக்களில் ஊர்வலமாக சென்று வெளிப்படுத்துவது தேவையற்றது. முகமது … Read more

காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக 50 சுற்​றுலா தலங்​களை ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மூடியது. இந்​நிலை​யில் விரி​வான பாது​காப்பு மறுஆய்​வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலை​மை​யில் ஸ்ரீநகரில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற கூட்​டத்​தில் இதற்​கான முடிவு … Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! இன்றே கடைசி நாள்!

Old Pension Scheme Deadline: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் தகுதியான ஊழியர்கள், தங்களது விருப்பத்தை இன்று மாலைக்குள் தங்களது துறை தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆக்ராவில் சாமியார் சைதன்யானந்தா கைது

புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருப்பவர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி. இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சுவாமி சைதன்யானந்தா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் மணிப்பூரில் கைது

இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் பிஎல்ஏ அமைப்புக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கியதாக அரசு தெரிவித்துள்ளது. பிஎல்ஏ அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் ஜிதன் சிங் (56) இம்பால் மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே அமைப்பைச் சேர்ந்த சோபி சிங் (50) இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். என்ஆர்எப்எம் … Read more

கருட சேவையை முன்னிட்டு அலிபிரியில் குவிந்த வாகனங்கள்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் கருட வாகன சேவை நேற்று இரவு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் 4 மாட வீதிகளும் நிரம்பி விட்டன. அதாவது மாட வீதிகளில் மட்டுமே சுமார் 1.90 லட்சம் பக்தர்கள் கருட சேவையை காண இடம் பிடித்து விட்டனர். இவர்களைத் தவிர, மாட வீதிகளுக்குள் நுழைய மேலும் பல்லாயிரக்கணக்கானோர் போலீஸ் கெடுபிடிகளையும் மீறி உள்ளே செல்ல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இரவு கருட வாகன சேவை தொடங்கி 1 … Read more

தர்மஸ்தலா வழக்கில் திருப்பம்: பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகார்தாரர் சின்னையா வாக்குமூலம்

பெங்களூரு: தர்​மஸ்​தலா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட புகார்​தா​ரர் சின்​னையா நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். கர்​நாட​கா​வின் தட்​சிண கன்னட மாவட்​டம், தர்​மஸ்​தலா​வில் புகழ்​பெற்ற மஞ்​சு​நாதா கோயில் உள்​ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்த சின்​னையா கடந்த ஜூனில் தர்​மஸ்​தாலா காவல் நிலை​யத்​தில் புகார் மனுவை அளித்​தார். அதில், “மஞ்​சு​நாதா கோயி​லில் சுமார் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​கள், சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்​டனர். அவர்​களின் உடல்​களை நான் புதைத்​தேன்’’ … Read more

எச்1பி விசா உள்ள இந்திய ஊழியர்கள் திரும்புவதைத் தடுத்த அமெரிக்கர்கள்

புதுடெல்லி: எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு திரும்புவதைத் தடுக்க, அந்நாட்டு வலதுசாரி அமைப்பினர் இன ரீதியில் பிரச்சாரம் தொடங்கியது தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்படும் என கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து, விடுமுறையில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தின. இதனால், ஏராளமானோர் ஒரே நேரத்தில் விமான டிக்கெட் புக் … Read more