உத்தராகண்டில் மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம்: இமயமலையில் இருந்த கிராமமே அடித்துச் செல்லப்பட்டது – முழு விவரம்

டேராடூன்: உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனித தலங்கள் அமைந்துள்ளன. கங்கோத்ரி கோயிலுக்கு அருகே 8 கி.மீ. தொலைவில் தரளி என்ற கிராமம் உள்ளது. இமயமலையில் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமம் வழியாகவே கங்கோத்ரி கோயிலுக்கு செல்ல முடியும். இதனால் தரளி கிராமத்தில் 25 ஓட்டல்கள், தங்கும் … Read more

‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் நெஞ்சுரம்’ – சத்ய பால் மாலிக் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சத்ய பால் மாலிக் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அமைப்பின் படிநிலைகளினூடே உயர் பொறுப்புகளை வகிக்கும் நிலைக்கு உயர்ந்தாலும், அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் நெஞ்சுரத்தை அவர் வெளிப்படுத்தினார். வகித்த பொறுப்பில் இருந்து அவர் ஓய்வுபெற்றபோதிலும், அவரது மனச்சான்று உறங்கிடவில்லை. அவர் வகித்த பொறுப்புகளால் மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளாலும் சத்ய … Read more

உத்தராகண்ட் மேக வெடிப்பு: வெள்ளம், இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரம்

ரிஷிகேஷ்: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர். வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் … Read more

இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து: அக்.1 முதல் நேரடி விமான சேவை

புதுடெல்லி: இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், புதுடெல்லி – மணிலா நேரடி விமானச் சேவை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளது. 5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியர், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்களுடனான சந்திப்பும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, … Read more

CBSE 10ம் வகுப்பு துணைத் தேர்வு: வெளியான முடிவுகள் – அதை பார்ப்பது எப்படி?

CBSE 10th Compartment Test Results: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்ச்சி விகிதம், தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.

உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம் – பாதிப்பு நிலவரம் என்ன?

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலச்சரிவிலும், கரைபுரண்டோடிய வெள்ளத்திலும் சிக்கிய ஏராளமான வீடுகளும், தங்கும் … Read more

சொத்து வாங்குவோர்/விற்போர் கவனத்திற்கு… இந்த தவறை செய்ய வேண்டாம்!

வருமான வரி சட்டம், பிரிவு 55-இன் படி, ஒரு சொத்தை விற்கும் போது கிடைக்கும் லாபத்தை கணக்கிடும்போது, சில குறிப்பிட்ட செலவுகளை வரிக்குட்பட்ட லாபத்தை குறைத்து கொள்ளலாம். 

ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலில் இருந்து எங்கள் நாட்டினரை மீட்டது இந்தியா: பிலிப்பைன்ஸ் அதிபர்

புதுடெல்லி: ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலின்போது பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்பதில் முதலில் களமிறங்கியது இந்தியாதான் என்றும், அதை தங்கள் நாடு அங்கீகரிப்பதாகவும் அந்நாட்டின் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார். 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஃபெர்னாண்ட் மார்கோஸ் ஜூனியர், “கடந்த 2024-ல் ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலில் … Read more

அமெரிக்காவை சீண்டிய இந்திய ராணுவம் – 1971 சம்பவம் நினைவிருக்கா… பின்னணி என்ன?

Indian Army: 1971ஆம் ஆண்டில் இதே நாளில் வெளியான ஒரு நாளிதழை இந்திய ராணுவம் இன்று பகிர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சாடி உள்ளது. இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியா? – மாயாவதி திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: பாஜக கூட்டணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி இல்லை என்று அதன் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது காங்கிரஸின் இண்டியா கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அனைவரின் நலன்; அனைவரின் மகிழ்ச்சி என்ற அம்பேத்கரின் கொள்கையை பிஎஸ்பி பின்பற்றி வருகிறது. ஆனால், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான சாதிய … Read more