கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் விவரங்களை கட்டாயமாக பதிவு செய்வதுடன் அதற்கான காரணங்களைக் கண்டறியவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2024 முதல் … Read more