இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் முறை​யாக கார்ப்​பரேட் தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் எண்​ணிக்கை 20 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. இதுதொடர்​பாக நியூ​யார்க்கை சேர்ந்த அவதார்​-செ​ராமவுண்ட் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலைமை பொறுப்​பு​களில் 2016-ல் 13%-​மாக இருந்த பெண்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்​தது. இந்த நிலை​யில் தற்​போது தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் பங்கு முதல் முறை​யாக 20% தொட்​டுள்​ளது. இது சமூகத்​தில் முற்​போக்​கான நிலையை பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது. உலகம் முழு​வதும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலை​மைப் பதவி​களில் … Read more

தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதுதொடர்​பான தகவலை காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய செய்தித் தொடர்​பாளர் பவன் கேரா வெளி​யிட்​டுள்​ளார். ராகுல் காந்​தி​யுடன் பவன் கேரா​வும் தென் அமெரிக்கா​வுக்கு சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். 4 நாடு​களை உள்​ளடக்​கிய இந்த பயணத்​தின்​போது அரசி​யல் தலை​வர்​களை​யும், பல்​கலைக்​கழக மாணவர்​களை​யும், தொழில்​துறை தலை​வர்​களை​யும் ராகுல் காந்தி சந்​தித்து உரை​யாட உள்​ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்​கத்​தில் … Read more

சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுடன் தொடர்பு: லடாக் டிஜிபி

லே: லடாக்கில் கைது செய்யப்பட்ட பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் வங்கதேசம் சென்று வந்ததாகவும் லடாக்கின் காவல்துறை இயக்குநர் எஸ்டி சிங் ஜம்வால் தெரிவித்தார். லேவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிஜிபி எஸ்டி சிங் ஜம்வால், “செப்டம்பர் 24 அன்று ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. நான்கு பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர். மத்திய அரசுடன் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை … Read more

‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ – கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

புதுடெல்லி: கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வேதனையளிக்கிறது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 31 பேர் … Read more

‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: உ.பி.யின் பரேலி வன்முறை தொடர்பாக மதகுரு, 7 பேர் கைது – பின்னணி என்ன?

பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி அந்த கிராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்சாரப் பலகை நிறு​வப்​பட்​டது. முதல் … Read more

“லடாக் மக்களுக்கு பாஜக துரோகம்” – சோனம் வாங்சுக் கைதுக்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லடாக் மக்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “லடாக்கில் நிலைமையை அரசு மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. லடாக் மக்களின் விருப்பங்களுக்கு … Read more

பிஹாரில் தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் விரட்டப்படுவார்கள்: அமித் ஷா

அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். … Read more

பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா; ஐ.நா.வில் மாஸ் காட்டிய பெடல் கெலாட் – யார் அவர்?

Petal Gahlot: ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியா தரப்பில் அதிரடி பதிலடியை கொடுத்த ஐ.நா. செயலாளர் பெடல் கெலாட் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோஜ் சின்ஹா, “நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதம் குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பெருமளவில் பயங்கரவாதம் இல்லாத நிலையில்தான் உள்ளன. இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்ஸலிசம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அது நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்று … Read more

5 வயது குழந்தையின் தலையை வெட்டி கொன்ற நபர்! நடந்தது என்ன? முழு விவரம்!

Madhya Pradesh 5 Year Old Boy Killed : மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.