சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்: ஐ.நா.வில் இந்தியா ஆணித்தரமாக வாதம்

ஸ்லோவேனியா: மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார். ஸ்லோவேனியாவில் ‘ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் – பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஆற்றிய உரையில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குஜராத் இளைஞர் கைது: கடற்படை, பிஎஸ்எப் ரகசியங்களை பகிர்ந்தது கண்டுபிடிப்பு

புது டெல்லி: இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்ச் பகுதியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹில் (28), 2023 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் மூலம் தன்னை அதிதி பரத்வாஜ் என்று சொல்லிக்கொண்ட ஒரு பாகிஸ்தான் முகவருடன் அறிமுகமானார். இதனையடுத்து கோஹில், புதிதாக கட்டப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் இருந்த இந்திய கடற்படை மற்றும் எல்லை பாதுகாப்புப் … Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு ஜப்பான் ஆதரவு: சல்மான் குர்ஷித் தகவல்

டோக்கியோ: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் குமார் ஜாவின் தலைமையில் ஜப்பான் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இது மிகவும் திருப்திகரமான மற்றும் சிறப்பான பயணமாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான … Read more

கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

பெங்களூரு: மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மக்கள் அமைதியாக இருந்து தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஊடகங்களில் … Read more

பயணிகள் கவனத்திற்கு! ரயில்களில் இருக்கும் இந்த கோடுகள் எதற்காக தெரியுமா?

ரயில் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள், வெள்ளை கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா? பலருக்கும் இது பற்றி தெரிந்து இருப்பதில்லை. முழு விவரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து டீம் இந்தியாவைப் … Read more

இனி எல்லா மாநிலங்களுக்கும் 'இதுதான்' டார்கெட் – பிரதமர் மோடி சொன்ன பிளான் என்ன?

PM Modi: டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மத்தியில், பிரதமர் மோடி முக்கியமாக வலியுறுத்தி பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.

கரோனா பாதிப்பு: கேரளா, மும்பை, டெல்லி மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளன. கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மே மாதத்தில் புதிய கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. என்றாலும் இவைகள் தீவிரத் தன்மையற்ற, பாதிப்பு குறைவானவையே. இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தெற்காசியாவில் ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் … Read more

கார் – லாரி மோதல்: ஆந்திராவில் 6 பேர் உயிரிழப்பு

ஓங்கோல்: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாட்டிசெர்லமாடு எனும் கிராமத்துக்கு அருகில் நேற்று காலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் பாபட்லா மாவட்டம், ஸ்டுவர்டிபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும், கர்னூல் அருகே உள்ள மகாநந்தி கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் … Read more

16 ஆண்டுகளுக்கு பின்… முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை – அதிக மழை பெய்யுமா?

Southwest Monsoon: தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.