20-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தீ விபத்து.. என்ன நடந்தது? வெளியான முக்கியத்தகவல்

Andhra Pradesh Bus Fire Accident News: ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற சொகுசு பேருந்து, நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. விபத்தில் இருசக்கர வாகன ஓட்டியும் உயிரிழந்தார்.

அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை

வயநாடு: கேரளா​வின் வயநாடு மாவட்​டம் திருநெல்​லி​யில் உள்ள அரசு ஆசிரம உயர்​நிலைப் பள்ளி கட்​டிடம் தகு​தியற்​றது என பொதுப் பணித் துறை அறி​வித்​தால் இங்​குள்ள மாணவர்​களை, கண்​ணூர் மாவட்​டம் ஆரலத்​தில் உள்ள மாதிரி உறை​விடப் பள்​ளிக்கு மாற்ற கேரள அரசு முடிவு செய்​துள்​ளது. இந்​நிலை​யில் மாநில எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி நலத்​துறை அமைச்​சர் ஓ.ஆர்​.கேலு​வுக்கு வயநாடு காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி எழு​தி​யுள்ள கடிதத்​தில், “அரசின் இந்த முடிவு மாணவர்​களை படிப்பை கைவிடச் செய்​யும். ஏனெனில் அவர்​களை … Read more

சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது

பத்​தனம்​திட்டா: கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார​பால​கர் சிலைகள் மற்​றும் அதன் பீடத்​துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்​றி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இந்த பணிக்​குப் பிறகு ஒப்​படைக்​கப்​பட்ட சிலை​யில் 4 கிலோ தங்​கம் மாய​மான​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த கேரள உயர் நீதி​மன்​றம், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது. இந்​நிலை​யில், திரு​வாங்​கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்​னாள் நிர்​வாக அதி​காரி … Read more

பேருந்தில் பற்றிய தீ… துடிதுடித்து பலியான 12 பயணிகள்… ஆந்திராவில் பரபர!

Andhra Bus Fire Accident : ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்தது ஏரிந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பலரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கட்சி தொடங்க கவிதா திட்டம்

ஹைத​ரா​பாத்: பிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்​திரசேகர ராவின் மகளும் தெலங்கானா மேலவை (எம்​எல்​சி) உறுப்​பினரு​மான கவி​தா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், யாதகிரி குட்டா பகு​தி​யில் உள்ள பிரசித்தி பெற்ற லட்​சுமி நரசிம்​மர் கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தெலங்​கானா ஜாக்​ருதி எனும் அமைப்பு சமூக அக்​கறை கொண்ட ஓர் அமைப்​பாக விளங்கி வரு​கிறது. இதன் தலை​வ​ராக நான் இருக்​கிறேன். தேவைப்​பட்​டால் இந்த அமைப்பு கட்​சி​யாக கூட மாறும் வாய்ப்பு உள்​ளது. … Read more

பிஹாரின் காட்டாட்சியை மறக்கவே முடியாது: ஆர்ஜேடி கட்சியின் முந்தைய ஆட்சி பற்றி பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: நூறு ஆண்​டு​கள் ஆனாலும் பிஹாரில் ஆர்ஜேடி கட்சியின் காட்​டாட்​சியை மக்​களால் மறக்​கவே முடி​யாது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி பாஜக தொண்​டர்​களு​டன் பிரதமர் மோடி அவ்​வப்​போது காணொலி வாயி​லாக கலந்​துரை​யாடி வரு​கிறார். இதன் ஒரு பகு​தி​யாக, ‘எனது பூத் மிக​வும் வலிமை​யானது’ என்ற தலைப்​பில் பாஜக தொண்​டர்​களு​டன் அவர் நேற்று மாலை காணொலி வாயி​லாக கலந்​துரை​யாடி​னார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: பிஹாரில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி … Read more

ஆசியான் உச்சி மாநாட்டில் நேரடி பங்கேற்பை தவிர்க்கும் பிரதமர் மோடி: பின்னணி என்ன?

புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை மதிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, புருனெய், லாவோ பிடிஆர், மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆசியான் … Read more

பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி: தேடப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர்

புதுடெல்லி: டெல்லி காவல்துறை மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து இன்று அதிகாலையில் நடத்திய என்கவுன்ட்டரில், பிஹாரில் தேடப்படும் குற்றவாளியான ரஞ்சன் பதக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் அதிகாலை 2.20 மணியளவில் டெல்லி-பிஹார் காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில், மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கும்பல் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். இக்கும்பலின் முக்கிய குற்றவாளியான ரஞ்சன் பதக் (25) மற்றும் பிம்லேஷ் மஹ்தோ (25), … Read more

தேஜஸ்வியை நம்ப முடியாது; மோடி, நிதிஷையே பிஹார் மக்கள் நம்புகின்றனர்: ரவிசங்கர் பிரசாத்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி – நிதிஷை பிஹார் மக்கள் நம்புகின்றனர் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “தேஜஸ்வி யாதவ் என்ன சொல்கிறார் என்று முதலில் அவருக்குப் புரிகிறதா?. அவரது தந்தைக்கு மாட்டு தீவன ஊழலின் நான்கு வழக்குகளில் 32.5 … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா … Read more