‘The Ba***ds of Bollywood’ சீரிஸுக்கு எதிர்ப்பு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீர் வான்கடே அவதூறு வழக்கு

டெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘The Ba***ds of Bollywood’ என்ற சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, சீரிஸை தயாரித்த ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஷாருக்கான், கவுரி கான் மற்றும் அந்த சீரிஸை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே. ஆர்யன் கான் சிக்கிய கதை: கடந்த 2021 அக்டோபர் … Read more

கரண்டி, பிரஷ்களை சாப்பிட்டு வந்த இளைஞர் – போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த அதிர்ச்சியும் பின்னணியும்

புதுடெல்லி: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் ஒரு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அதில், 35 வயதான சச்சின் என்பரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு நோயாளிகளுக்கு குறைவான உணவுதான் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், சச்சின் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் … Read more

லடாக் போராட்டம் | “என்னை சிறை வைத்தால் பிரச்சினை அதிகரிக்கும்” – சோனம் வாங்சுக் எச்சரிக்கை

லே: “லடாக் போராட்டத்துக்காக என்னை சிறை வைத்தால், அது பிரச்சினையை அதிகமாக்கவே செய்யும்” என்று சூழலியல் செயற்பாட்டாளரும், லடாக் மாநில அந்தஸ்துக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் லடாக்​கில் நேற்று முழு … Read more

லடாக் வன்முறைக்கு மத்திய பாஜக அரசே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: லடாக்கில் ஏற்பட்ட வன்முறையால் விலைமதிப்பில்லாத 4 உயிர்கள் பறிபோனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக வெளியீட்டுப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லடாக்கில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது துயரகரமானது. அரசின் தோல்வியடைந்த வாக்குறுதிகளை இது நினைவூட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம், அமைதிக்கு வழி வகுக்கும் என கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. 6 … Read more

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி – ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி: ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் அக்னி – ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக அக்னி – ப்ரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை 2000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது … Read more

லடாக் போராட்ட களத்தில் ஜென் ஸீ இளைஞர்களும் பின்னணியும் – யார் இந்த சோனம் வாங்சுக்?

காலங்காலமாக மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க மற்றும் நிலைநாட்ட, நீதி கேட்க, அடக்குமுறையை எதிர்க்க, சுதந்திரம் பெற என எல்லாவற்றிற்கும் போராட்டங்கள்தான் பதிலும், பலனும் கொடுத்துள்ளன என்பது உலக வரலாறு. சமீப ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளும் பல போராட்டங்களைக் கண்டுவருகின்றன. அதில் பலவும் வன்முறைப் போராட்டங்களாக மாறிவிடுகின்றன என்பதுதான் வேதனை. போராட்டக் களங்களின் நாயகர்களாக இப்போதெல்லாம் பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவும், அண்மையில் நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாயிருந்தனர் ஜென் ஸீ இளைஞர்கள். தற்போது, அதே … Read more

ஏமாற்றும் ஜிஹாதிகளை அரசு எந்த விலை கொடுத்தாவது நசுக்கும்: உத்தராகண்ட் முதல்வர்

டேராடூன்: ஏமாற்றும் ஜிஹாதிகளை எந்த விலை கொடுத்தாவது உத்தராகண்ட் அரசு நசுக்கும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “(தேர்வுகளில்) ஏமாற்றுவதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்ததை அடுத்து, பயிற்சி மாஃபியாவும் (பயிற்சி நிறுவனங்கள்), மோசடி மாஃபியாவும் இணைந்து ‘ஏமாற்றும் ஜிஹாத்’ முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், ‘ஏமாற்றும் ஜிஹாதி’களை அரசு எந்த விலை கொடுத்தேனும் நசுக்கும். மோசடி மாஃபியாவைக் கட்டுப்படுத்த … Read more

CBSE 10 ஆம், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு; முழு அட்டவணை இதோ

CBSE 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அட்டவணையின்படி, CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஜூலை 15, 2026 வரை நடைபெறும்.

இந்து மக்கள் தொகை: ஆதித்யநாத் கருத்து

லக்னோ: ‘தற்சார்பு இந்தியா – சுதேசி சங்கல்ப்’ என்ற பெயரில் லக்னோவில் நடந்த மாநில அளவிலான பயிலரங்கில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் கடந்த 1100-ம் ஆண்டில் இந்துக்களின் மக்கள் தொகை 60 கோடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட அந்நிய ஊடுருவல் காரணமாக இந்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்துக்களின் எண்ணிக்கை வெறும் 30 கோடியாக இருந்தது. 800 முதல் … Read more

போலி ஓவியங்களை விற்றதாக வழக்கறிஞர் உட்பட 5 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்

மும்பை: மும்​பையைச் சேர்ந்த வழக்​கறிஞர் விஸ்​வாங் தேசாய். இவரது நண்​பர் ராஜேஷ் ராஜ்​பால், அரிய ​வகை ஓவி​யங்​களை விற்​கும் ஆர்ட் இந்​தியா இன்​டர்​நேஷனல் என்ற கடையை நடத்​துகிறார். விஸ்​வாங் தேசாய்க்கு தொழில​திபர் புனீத் பாட்​டியா வுடன் பழக்​கம் ஏற்​பட்​டது. ஓவி​யங்​கள் சேகரிப்​பில் தனக்கு 25 ஆண்​டு​கள் அனுபவம் உள்​ள​தாக கூறி, புனீத் பாட்​டி​யாவை கலை​யில் முதலீடு செய்​யும்​படி தேசாய் தூண்​டி​யுள்​ளார். மத்​தி​யப் பிரதேச மகா​ராஜா ஒரு​வர் வைத்​திருந்த ஓவி​யங்​கள் தனக்கு தெரிந்த ஒரு​வரிடம் உள்​ளது எனவும் கூறி​யுள்​ளார். … Read more