3 சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு வாபஸ் – ஹரியாணாவில் பாஜக பெரும்பான்மை இழந்தது

சண்டிகர்: ஹரியாணாவில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றதால், பாஜக பெரும்பான்மை இழந்துள்ளது. ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர் சிங்ஹுடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர். 2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக … Read more

நாடு முழுவதும் 3-ம் கட்ட மக்களவை தேர்தல்: 93 தொகுதிகளில் 64% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 93 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த … Read more

“ஆகாஷ் ஆனந்த் இனி தனது அரசியல் வாரிசு கிடையாது”: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி. கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் மாயாவதி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, மாயாவதியை விடவும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம். லண்டனில் எம்பிஏ படித்த ஆகாஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் நவீன முகமாகவே … Read more

கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் ‘தயக்கம்’ காட்டுவது ஏன்?

புதுடெல்லி: “சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தனது அலுவல் பணிகளைச் செய்ய முடியாது. அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இடைக்கால ஜாமீன் குறித்த விசாரணையை மே 9-ம் அல்லது அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. தற்போது திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், தான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த … Read more

ஹரியாணாவில் பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 3 சுயேச்சை எம்எல்ஏக்கள்

சண்டிகர்: ஹரியாணாவில் பாஜக ஆட்சியை ஆதரித்துவந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஹரியாணா சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டது. எனினும், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்குப் பதிலாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனால், … Read more

மக்களவைத் தேர்தல் | இரவு 8 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு – அசாமில் அதிகம்

புதுடெல்லி: மக்களவை 3 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு 8 மணி நிலவரப்படி, 61.45 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அசாமில் 75.26 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.77 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது. மாநில வாரியாக வாக்குப்பதிவு மத்தியப் பிரதேசம் 63.09% மகாராஷ்டிரா 54.77% அசாம் 75.26% பிஹார் 56.55% சத்தீஸ்கர் 66.99% கோவா 74.27% குஜராத் 56.76% கர்நாடகா 67.76% உ.பி. 57.34% தாதர் அண்ட் நாகர் … Read more

இடஒதுக்கீடு விவகாரம்: லாலு கருத்தை முன்வைத்து பிரதமர் மோடி கடும் தாக்கு

புதுடெல்லி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த பேச்சு, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றி சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் என்பதை தெளிவாக்கியுள்ளது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உள்ளிட்ட பிஹார் மேலவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவிடம், … Read more

“அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பை ஊக்குவிக்கிறது பாஜக” – வீடியோ பதிவில் சோனியா காந்தி சாடல்

புதுடெல்லி: “அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்” எனக் கூறி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதோடு பெண்களும் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்; பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் மிகுந்த பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சூழ்நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி … Read more

‘மக்களுக்கு நம்பிக்கை போய்விடாதா?’ – மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேற்கு அரசு சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கில், மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று (மே.7) விசாரித்தது. அப்போது நீதிபதிபதிகள் அமர்வு, “மேற்கு வங்க அரசு எதற்காக இத்தனை … Read more

“நானும் பார்த்து மகிழ்ந்தேன்” – தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது டீப் ஃபேக் வீடியோவை எக்ஸ் தளத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து தான் மிகவும் மகிழ்ந்ததாக அதில் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதுவும் சாத்தியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அந்த வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் டீப் ஃபேக் வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு இந்திய தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. சமயங்களில் அதிர்வலைகளையும் இந்த வீடியோக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி மேடை ஒன்றில் … Read more