ராகுல் காந்திக்கு எதிராக 181 துணை வேந்தர்கள், கல்வியாளார்கள் திறந்த மடல்: பின்னணி என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளனர். அண்மையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அண்மையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் … Read more

டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

அகமதாபாத்: டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் குண்டு வைத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் உள்ள பள்ளிகளில் குண்டு வைத்திருப்பதாக சுமார் 200 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு … Read more

கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி… ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

Jharkhand ED Raid Latest News: ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் அமைச்சர்  தனிச் செயலரின் உதவியாளர் வீட்டில் கோடிக் கணக்கில் பணம் பறிமுதல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் வீட்டில் இன்று (மே 6) காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு முறையான கணக்குகள் ஏதும் இல்லை. இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களில் பெரிய பைகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம் எடுக்கும் காட்சிகள் … Read more

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்

CISCE ISC 12th, ICSE 10th Result 2024 Updates: தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது– cisce.org, results.cisce.org. தகுதி பட்டியலை இங்கே சரிபார்க்கவும்.  

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஹைதராபாத்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என தெலங்கானாவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், நிர்மல் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழைகளின் உரிமைகளை பறித்துக் கொண்டு, அவற்றை பணக்காரர்களுக்கு சாதகமாக மாற்றும் திறன் கொண்டவர்கள் பாஜகவினர். இந்த தேர்தல், அரசியல் … Read more

பிரிட்டிஷ் நாட்டவர், சிறை தண்டனை பெற்றவர்: ரேபரேலியில் ராகுல் காந்தியின் வேட்புமனுவை நிராகரிக்க கோரி புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் காரணமாக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரே பரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. … Read more

பள்ளிகளில் குளிர்சாதன வசதி வழங்கப்பட்டால் பெற்றோர்களே செலவை ஏற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: பள்ளி வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி வழங்கப்படும்பட்சத்தில், அதற்கான தொகையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருநகரங்களில் சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கல்விக் கட்டணம், ஆய்வகக் கட்டணம் வசூலிப்பதுபோல் ஏசி கட்டணமாக மாதம் கணிசமான தொகையை அப்பள்ளிகள் வசூலிக்கின்றன. டெல்லியில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ஏசி கட்டணமாக மாதம் ரூ.2,000 வசூலித்து வந்துள்ளது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் ஒருவர் … Read more

புரட்சி படைக்கும் இந்திய பெண் பஞ்சாயத்து தலைவர்கள்: ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பெருமிதம்

நியூயார்க்: இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் முன்னேற்றம் குறித்து ஐநா சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பெண்கள், “நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மையமாக்குதல்: இந்திய வளர்ச்சிக்கு வழிகாட்டும் உள்ளாட்சியில் உள்ள பெண்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடினர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதர் ருசிரா கம்போஜ் கூறியது: உள்ளாட்சியில் மூன்றில் ஒரு … Read more

3-வது கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 94 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் … Read more