13-ல் இண்டியா கூட்டணி 10, பாஜக 2 இடங்களில் வெற்றி – 7 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்
புதுடெல்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளின்படி, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பிஹாரின் சில … Read more