பாஜகவில் டெல்லி காங். முன்னாள் தலைவர் அர்விந்தர் லவ்லி ஐக்கியம்

புதுடெல்லி: சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, முன்னாள் நகர நிர்வாக அமைச்சர் ராஜ் குமார் சவுகான் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் நீராஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தவாடே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் அனைவரும், மக்களவைத் தேர்தலில் அக்கட்சி … Read more

தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த விமானப்படை வீரர் வீரமரணம் @ ஜம்மு காஷ்மீர்

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையின் இரு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். சனிக்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவர் நிலையாக இருப்பதாகவும். … Read more

ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வாகனத்தை தாக்கிய தீவிரவாதிகள் – 5 வீரர்கள் காயம்

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு படைப் பிரிவு வாகனங்களை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு வாகனம் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது என்ற தகவல் கிடைத்துள்ளது. வரும் 25-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பூஞ்ச் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியில் … Read more

“இதுதான் பாஜகவின் சதி!” – சந்தேஷ்காலி விவகாரத்தில் வீடியோ பகிர்ந்து மம்தா தாக்கு

புதுடெல்லி: “மேற்கு வங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித் திட்டத்தை தீட்டியுள்ளது” என சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரும், அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் விளைநிலங்களை அபகரித்ததாகவும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் … Read more

கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரம்: ஹெச்.டி.ரேவண்ணா கைது

பெங்களூரு: கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டிரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெண்ணைக் கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். கடத்தப்பட்ட பெண்ணின் மகன் தனது தாய் கடத்தப்பட்டதாக ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது உதவியாளர் சதீஸ் மீது புகார் அளித்திருந்தார். அந்தப் பெண் ரேவண்ணாவில் வீட்டில் சுமார் ஐந்து ஆண்டுகள் … Read more

கைதானார் ஹெச்.டி. ரேவண்ணா… பெண் கடத்தல் புகாரில் போலீசார் நடவடிக்கை!

HD Revanna Arrested: கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்டி. ரேவண்ணா இன்று சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்ட்டுள்ளார். 

தென் தமிழகம் உட்பட இந்திய கடலோர பகுதிகளுக்கு மே 6 வரை கடல் அலைச் சீற்ற எச்சரிக்கை

புதுடெல்லி: தொலைதூர இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் உயர் அலை பெருக்கம் காரணமாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றத்துடனும் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது. இந்தக் கடல் சீற்றம் சனிக்கிழமை முதல் இம்மாதம் 6-ம் தேதி வரையில் இருக்கும் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

பிரஜ்வெல் ரேவண்ணாவை பிடிக்க… கர்நாடக அரசு போடும் பிளான் – உள்ளே வரும் சிபிஐ

Prajwal Revanna Case Latest Updates: பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா வழக்கில் சிபிஐயை கர்நாடகா நாடியுள்ளது.

“அரண்மனையில் வசிக்கும் மோடிக்கு விவசாயிகளின் நிலை புரியுமா?” – பிரியங்கா காந்தி பதிலடி

புதுடெல்லி: “பிரதமர் மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். அவருக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல் அடக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியது: “பிரதமர் மோடி எனது சகோதரனை இளவரசர் என்று அழைக்கிறார். ஆனால், காங்கிரஸ் எம்.பி ராகுல் 4,000 கி.மீ … Read more

“அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறோம்” – பைடனின் ‘அந்நிய வெறுப்பு’ கருத்துக்கு இந்தியா பதில்

புதுடெல்லி: ‘இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகாமாகி விட்டது’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்தை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியச் சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், “முதலில் இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா எப்போதுமே ஒரு தனித்துவமான நாடு. உலக வரலாற்றிலேயே பல்வேறு சமூகங்களை … Read more