துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு… பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!

Prajwal Revanna Latest News Update: பிரஜ்வெல் ரேவண்ணா தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலால் கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை பரிசீலிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய … Read more

பெங்களூருவில் 5 மாதங்களுக்குப் பிறகு மழை: கடும் வெயிலில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சி!

பெங்களூரு: 5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது. கடைசியாக நவம்பர் 23 அன்று பெங்களூருவில் மழை பதிவானது. அதன் பின்னர் அந்நகரம் வறண்ட வானிலையைதான் கண்டு வந்தது. தற்போது அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். இந்தியாவின் தோட்டநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அதாவது, பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் இருந்து வந்த நிலையில், அப்பகுதி மக்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில், 5 … Read more

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை, “மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி … Read more

மக்களவை தேர்தல் 2024… பிரியங்கா – ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!!

Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

“அமேதி, ரேபரேலி காங். வேட்பாளர்கள் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம்” – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் நிறைய பேர் நிறைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதி. தேர்ந்த செஸ் வீரரும் கூட. கட்சி இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு பெரிய அரசியல் உத்தியை … Read more

“அர்ப்பணிப்பு மிக்கவர்” – அமேதி காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரியங்கா வாழ்த்து

புதுடெல்லி: “அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர்” என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி லால் சர்மா குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காந்தி – நேரு குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் … Read more

“மோடியின் ஈகோவால் அழகான மணிப்பூர் மாநிலம் சேதம்” – கார்கே கண்டனம்

புதுடெல்லி: அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மணிப்பூர் சரியாக ஒரு வருடம் முன்பு மே 3, 2023 அன்று எரியத் தொடங்கியது. அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளன. ஒரு துளி வருத்தம் கூட இல்லாத பிரதமர் மோடி இதுவரை மணிப்பூரில் … Read more

சோனியா, பிரியங்கா, காங்., மூத்த தலைவர்கள் சூழ ரேபரேலி வந்தடைந்த ராகுல் காந்தி

ரேபரேலி: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரேபரேலியில் இன்றே (மே.3) வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி. இதற்காக ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, தாயார் சோனியா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோருடன் தனி விமானம் மூலம் உ.பி. வந்தடைந்தார். இவர்களைத் … Read more

டீஃப் பேக் தொழில்நுட்பத்தை தடுக்க கோரி மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை தேர்தலில் டீஃப் பேக் (ஒருவரின் உருவத்தை மற்றொருவரின் உருவத்தோடு நம்பக்கூடிய வகையில் மாற்றியமைப்பது) தொழில்நுட்பம் பொது நடவடிக்கை மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அரசியல் வேட்பாளர்கள் அல்லது பொதுப் பிரமுகர்கள் தொடர்பான டீஃபேக் உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக தளங்களுக்கு வழிகாட்டவும், அதுதொடர்பான விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் … Read more