‘எங்கள் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் 

புதுடெல்லி: இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் முன் அனுமதியின்றி அதன் எல்லைக்குள் பல வழக்குகளின் விசாரணையை சிபிஐ முன்னெடுப்பதாக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 131-ன் கீழ் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த … Read more

NEET 2024 Admit Card | இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Neet Hall Ticket Download: மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஒடிசாவில் வேட்பாளராக களமிறங்கினார் ஹேமந்த் சோரனின் சகோதரி!

ராஞ்சி: ஒடிசா மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சார்பில் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததார். 2019ல் மயூர்பஞ்ச் மக்களவைத் … Read more

விரைவில் கைது உறுதி.! பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசு லுக்அவுட் நோட்டீஸ்

Look-out Notice Issued Prajwal Revanna: முன்னாள் பிரதமர் எச்டி எச்.டி.தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஜெர்மனி தப்பி சென்ற அவருக்கு கர்நாடக அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் பணி நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா. விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி பணிநீக்கம் செய்துள்ளார். ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் பணிநீக்கம் உத்தரவு வெளிவந்துள்ளது. முன்னதாக, டெல்லி மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை முடிவுகளின்படி, 40 பணியாளர்களே நியமிக்க சட்டம் இருக்கும் நிலையில், முறைகேடாக 223 … Read more

Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்

PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடி வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார்” – இடஒதுக்கீடு விவகாரத்தில் ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: “இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார் பிரதமர் மோடி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் உளறி வருகிறார். அவர் உயிருடன் இருக்கும் வரை, மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கவிடமாட்டோம் என்கிறார். ஆனால் உண்மை என்னவெனில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்போ, வாக்குறுதியோ எதுவும் இல்லை. இண்டியா கூட்டணியின் வேறு எந்த … Read more

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்க்கும் முன்னாள் ‘சீடர்’ ஷ்யாம் ரங்கீலா

வாராணசி: பிரதமர் மோடியை போல் மிமிக்ரி செய்து புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஷ்யாம் ரங்கீலா, மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாராணசியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர். 28 வயதாகும் இவரின் நையாண்டிகளால் ஒருகட்டத்தில் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டே இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது பாஜகவை … Read more

செல்போன் செயலியில் மோசடி முதலீட்டு திட்டம்: நாடு முழுவதும் 30 இடங்களில் சோதனை – சிபிஐ

புதுடெல்லி: செல்போன் செயலியில் செய்யப்பட்டு வந்த மோசடி முதலீட்டுத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த சோதனை நடந்ததாகத் தெரியவந்துள்ளது. எச்பிஇசட் டோக்கன் என்ற பெயரில் செல்போன் செயலி ஒன்று பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலி மூலம் பணத்தை முதலீடு செய்வது நடந்து வந்தது. கிரிப்டோ கரன்சி மூலம் இந்த முதலீடு நடைபெற்றது. ஆனால் இந்த செயலி முதலீடு செய்பவர்களை … Read more

"Arrest Narendra Modi" இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?

Arrest Narendra Modi Trending Hashtag : பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்யக்கோரி, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?