அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12-ல் நேரில் ஆஜர்படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு ரோஸ் அவன்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த 7-வது துணை குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கைவிடப்பட்டுள்ள டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கில், அமலாக்கத் துறை 7-வது … Read more

“போர்க்களத்தில் அமைதிக்கான தீர்வு எதுவும் கிட்டாது!” – புதினிடம் பிரதமர் மோடி பகிர்வு

மாஸ்கோ: “ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும்” என்று ரஷ்ய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக … Read more

மும்பையை உலுக்கிய சொகுசு கார் விபத்து: ஷிண்டே கட்சி பிரமுகரின் மகன் கைது – நடந்தது என்ன?

மும்பை: மும்பையின் வோர்லி பகுதியில் ஜூலை 7-ம் தேதி அதிகாலையில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் மிஹிர் ஷா என்ற இளைஞர் 72 மணி நேரத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். புனே போர்ஷே கார் விபத்து போல மும்பை நகரிலும் கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன நடந்தது? – மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான … Read more

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பணம் வந்தவுடன் காதலனுடன் தப்பியோடிய 11 மனைவிகள்!

உத்தரபிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்ட நிதியில் இருந்து பணம் கிடைத்தவுடன் தங்களது காதலனுடன் 11 திருமணமான பெண்கள் தப்பி ஓடி உள்ளனர்.

கேரளாவின் சொந்த விமான நிறுவனம்: ‘ஏர் கேரளா’ சேவைக்கு மத்திய அரசு அனுமதி

கொச்சி: ‘ஏர் கேரளா’ விமான நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை ‘ஏர் கேரளா’ தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான நிறுவனமாக ஏர் கேரளா உருவெடுத்துள்ளது. கேரள அரசால் 2005-ம் ஆண்டு முதல்வராக உம்மன் சாண்டியால் ஏர் கேரளா விமான திட்டம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் வாழும் மலையாள மக்களின் கனவு திட்டமாக இது அறியப்பட்டது. வளைகுடா … Read more

Kerala Lottery Result: ஸ்திரீ சக்தி லாட்டரி SS-423 முடிவுகள் வெளியானது!

Kerala Lottery Result Today: கேரள அரசின் ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆஸ்திரியா உருவாவதில் நேருவின் பங்கை ‘நேருபோபியா’ உடையவர்கள் நினைவு கூரவேண்டும்: காங்கிரஸ்

புதுடெல்லி: ஐம்பதுகளின் துவக்கத்தில் இறையாண்மை மற்றும் நிடுநிலையான ஆஸ்திரியா உருவாக காரணமான இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நேரு வெறுப்பு (நேருஃபோபியா) உள்ள பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள் நினைவுகூர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் ஆஸ்திரிய பயணத்துக்கு முன்பாக, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் இன்று ஆஸ்திரியாவில் … Read more

விராட் கோலியின் பப் மீது வழக்கு… இந்த விதிமுறையை மீறியதாம்… முழு விவரம்

Virat Kohli One8 Commune Pub: பெங்களூருவில் உள்ள விராட் கோலியின் பப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஹாத்ரஸ் சம்பவம்: மேலும் இருவர் கைது; போலே பாபா பற்றி முக்கிய குற்றவாளி பல்வேறு தகவல்

புதுடெல்லி: ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று கைதான முக்கிய குற்றவாளி மதுகரிடம் நடந்த விசாரணையின் பேரில் போலே பாபா பற்றி பல முக்கியத் தகவல்களும் கிடைத்துள்ளன. உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா ஆன்மிக கூட்டம் நடத்தினார். ஜுலை 2-ல் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு … Read more

கேரளா ஸ்த்ரீ சக்தி SS-423 லாட்டரி முடிவுகள் 3 மணிக்கு வெளியாகும்.. லட்சங்கள் யாருக்கு?

Kerala Lottery Result Declared At 3PM: லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேரளா லாட்டரி நிர்வாகம் மட்டுமே பொறுப்பாகும். ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 (STHREE SAKTHI SS-423) முடிவுகள் இன்று வெளியிடப்படும்.