நேரு மீதான ஜெய்சங்கரின் குற்றச்சாட்டு கொடூரமானது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த குற்றச்சாட்டு கொடூரமானது என கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் வெளியுறவு அமைச்சர் தொழில்முறை நிபுணராக அறியப்பட்டார். ஆனால், தற்போது அதற்கான அறிகுறியைக்கூட கைவிட்டுவிட்டதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். நேரு குறித்தும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் … Read more

மீண்டும் முதல்வரா அல்லது பாஜக தலைவரா? – மோடி – வசுந்தரா ராஜே சந்திப்பால் சர்ச்சை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பினால் அவர் மீண்டும் முதல்வராவாரா அல்லது பாஜகவின் தேசியத் தலைவராகிறாரா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ராஜஸ்தான் பாஜகவின் முக்கிய மூத்த தலைவராக இருப்பவர் வசுந்துரா ராஜே. இம்மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்தவர், ராஜஸ்தான்வாசிகளால் ‘மகாராணி’ என்றழைக்கப்படுகிறார். ஏனெனில், இவர் அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தை சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜகுடும்பத்தின் மருமகளாக வந்த வசுந்தரா அதன் மகாராணியாகவும் … Read more

சிந்தூர் நடவடிக்கையின்போது ட்ரம்ப் – மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை: ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். மாநிலங்களவையில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குக் காரணம், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட திருப்திப்படுத்தும் அரசியலே. அப்போது பிரதமர் நேரு, இந்த ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் … Read more

ஆபரேஷன் சிவசக்தி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் செக்டாரின் கல்சியன்-குல்பூர் பகுதியில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இது குறித்து இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், … Read more

பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டது எப்படி? – ‘ஆபரேஷன் மகாதேவ்’ குறித்து புதிய தகவல்கள் வெளியீடு

புதுடெல்லி: பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. கடந்த ஏப்​ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் கொடூரத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களை தேடும் பணி​யில் கடந்த 3 மாதங்​களாக இந்​திய ராணுவ​மும் புல​னாய்வு அமைப்​பு​களும் ஈடு​பட்டு … Read more

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ-வை பாராட்டிய அமைச்சர்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில் உள்ள டாக்​டர் ஏபிஜே அப்​துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​ட​தாக மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகத்​தின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: பிரளய் ஏவு​கணை​யின் இரண்டு தொடர்ச்சியான சோதனை​கள் அப்​துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்​றும் 29 தேதி​களில் … Read more

பஹல்காமில் தாக்கியவர்கள் பாக். தீவிரவாதிகள்தான்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா திட்டவட்ட பேச்சு

புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார். மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், சிஆர்பிஎப், ஜம்மு … Read more

“பிஹார் தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்” – சிராக் பாஸ்வான் நம்பிக்கை

பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், “தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. பிரதமர் மீது எனக்கு அர்ப்பணிப்பும் அன்பும் உள்ளது என்பதை நான் பலமுறை மீண்டும் தெரிவித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையிலேயே பிஹாரில் தேர்தல் … Read more

பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதனை!

புதுடெல்லி: பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ நேற்றும் இன்றும் (ஜூலை 28, 29) ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று ஏவப்படுகிறது!

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை ரூ.12,000 கோடியில் வடிவமைத்துள்ளன. பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் … Read more