ம.பி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 11 பேர் பலி; காயம் 200 – பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவிப்பு

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் ஏற்பட்ட … Read more

“வெண்டிலேட்டரில் இருந்த இண்டியா கூட்டணிக்கு நிதிஷ் இறுதிச்சடங்கு” – காங். அதிருப்தியாளர் விமர்சனம்

புதுடெல்லி: “இண்டியா’ கூட்டணி என்று எதுவும் இல்லையென நினைக்கிறேன். இண்டியா கூட்டணி துவக்கத்தில் இருந்தே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஐ.சி.யூ-வுக்கு சென்றது. அதன்பிறகு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டது” என காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளரும், மூத்த தலைவருமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம் செய்திருக்கிறார். பிஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரும், ‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கை கோர்த்து, வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மேற்கு … Read more

லிவ்-இன் உறவாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?

டேராடூன்: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதை கருத்தில் … Read more

லிவ்-இன் ஜோடிகளுக்கு இனி தலைவலிதான்… ரிஜிஸ்டர் முதல் சிறை வரை – பாஜக வைத்த ட்விஸ்ட்!

Live-In Relationship: உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவில், லிவ்-இன் உறவை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறித்து கொடுக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.

மத்தியப் பிரதேச பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 11 பேர் பலி; 60 பேர் காயம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தினால் எழுந்த தீ மற்றும் புகையினால் அருகில் உள்ள இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிவிபத்தின் தீவிரத்தால் அருகிலுள்ள நர்மதாபுரம் மாவட்டத்தின் சியோனி மால்வாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் … Read more

ஜெய் ஸ்ரீ ராம்’, ‘வந்தே மாதரம்’… – உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை தாக்கல் … Read more

“எங்கள் இந்துத்துவா அனைவரையும் ஏற்கக்கூடியது” – உத்தவ் தாக்கரே பேச்சு

ரத்னகிரி(மகாராஷ்டிரா): இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரையும் ஏற்கக்கூடியது எங்கள் இந்துத்துவா என்று சிவ சேனா(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ரத்னகிரி மாவட்டம் ராஜபூர், சிப்லுன் நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பொதுக்கூட்டத்துக்கு காவிநிற தொப்பி அணிந்தவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்களும் வந்திருப்பதைப் பார்க்கிறேன். இங்கே சத்ரபதி சிவாஜியின் சிலையும் இருக்கிறது, இஸ்லாமியர்கள் வழிபடக்கூடிய தர்காவும் இருக்கிறது. சமீபத்தில் நான் ராய்காட் வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தவர்கள் … Read more

டெல்லி | முதல்வர் கேஜ்ரிவாலின் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளின் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மற்றும் டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் வீடுகள், மேலும் சில ஆம் ஆத்மி கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. டெல்லி ஜல் … Read more

பெண் ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பும் EPFO: உங்களுக்கும் வந்ததா? இதுதான் சர்வே!!

EPFO Employer Rating Survey: இபிஎஃப்ஓ உடன் இந்த கணக்கெடுப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் ஈடுபட்டுள்ளன. 

உத்தராகண்டில் இன்று தாக்கலாகிறது பொது சிவில் சட்ட மசோதா: சட்டப்பேரவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

டேராடூன்: அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்ட மசோதா உத்தாரண்டில் இன்று (பிப்.6) தாக்கலாகிறது. காலை 11 மணிக்கு அவை கூடியதும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மசோதாவை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த மசோதாசட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில்சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெறும். முன்னதாக, மத்திய அரசு உருவாக்கிய பொது சிவில் சட்டத்தை ஆராய ஐந்துபேர் அடங்கிய உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்து உத்தராகண்ட் … Read more