தாஜ்மகாலில் 3 நாள் உருஸ் விழாவுக்கு தடை கோரி வழக்கு

புதுடெல்லி: தாஜ்மகாலில் 3 நாள் கொண்டாடப்படும் உருஸ் விழாவுக்கும் இந்த நாட்களில் பார்வையாளர்களை இலவசமாக அனுமதிக்கவும் நிரந்தரத் தடை கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் தாஜ்மகால் உள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதனை கட்டினார். 1653-ல் கட்டி முடிக்கப்பட்ட தாஜ்மகால், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனை மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) நிர்வகித்து வருகிறது. 15 … Read more

ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் முறைகேடு: மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: போலி வசிப்பிட சான்றிதழ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மத்திய ஆயுதப் படைகளில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மத்திய ஆயுதக் காவல் படை ஆட்சேர்ப்பில் எல்லைப் பகுதி இளைஞர்களுக்கு குறைந்தகட்-ஆஃப் மதிப்பெண் அனுமதிக்கப்படுகிறது. எல்லைப்புற மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்திலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெறுவதற்காக பிற மாநிலத்தவர் குறிப்பாக வடமாநில இளைஞர்கள் மேற்கு வங்கத்தில் போலி வசிப்பிட சான்றிதழ்களை பெற்று மத்திய … Read more

திடீரென எகிறிய ஓலா – ஊபர் கட்டணம்.. அதிர்ச்சியில் மக்கள்!

கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்ஸிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வாகனங்களின் விலையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது.

“புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள தவறிவிட்டனர்” – பிரதமர் மோடி @ அசாம்

குவாஹாட்டி: “சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்தவர்கள் வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை உணரவில்லை; அரசியல் காரணங்களுக்காக தங்களின் சொந்த கலாச்சாரம் குறித்து வெட்கப்படும் போக்கை உருவாக்கி விட்டார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ரூ.11,600 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் கூறியதாவது: “தங்களின் கடந்த காலத்தை அழித்து விட்டு எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. மத்திய அரசால் ரூ.498 கோடி … Read more

ரஷ்யாவிலுள்ள இந்திய தூரகத்தில் வேலை பார்த்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜென்ட் கைது

லக்னோ: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்தகாக கூறு ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய ராணுவ அமைப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ-க்கு வழங்கியதாக கூறப்படுகிறது. தீவிரவாத எதிர்ப்பு பிரிவால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டவர், உத்தரப் பிரதேசத்தின் ஹப்புர் மாவட்டத்தின் ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தில் வசிக்கும் … Read more

குளிரையும் பொருட்படுத்தாமல் இரவிலும் மத்திய அரசுக்கு எதிராக மம்தா போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிரான தனது போராட்டத்தை குளிருக்கு மத்தியில் இரவிலும் தொடர்ந்தார். பிறகு நேற்று அதிகாலையில் அவர் நடைப்பயிற்சிக்கு சென்றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு தனது நிதியை விடுவிக்காமல் ரூ.7 ஆயிரம் கோடி வரை நிலுவையில் வைத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார். “நிலுவைத் தொகையை … Read more

Paytm Payments Bank: ஒரே PAN, 1000 வாடிக்கையாளர்களின் KYC.. RBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (PPB) செயல்முறைகளை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி, பலவித மோசடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.

எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு: கேஜ்ரிவாலை தொடர்ந்து அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டியது தொடர்பாக நோட்டீஸ் வழங்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மாநில அமைச்சர் அதிஷி வீட்டுக்குச் சென்றனர். மதுரா சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு போலீஸ் குழு சென்ற போது அவர் வீட்டில் இல்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதே குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் … Read more

Video: பாரத் மாதா கீ ஜே… கேரள பெண்ணின் செயல் – டென்ஷன் ஆன மத்திய அமைச்சர்!

Meenakashi Lekhi Viral Video: கேரளாவில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பாரத் மாதா கீ ஜே என கோஷமிடாத பார்வையாளரை நோக்கி கடுமையாக சாடி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வரும் 9-ம் தேதி முதல் ‘பாரத் அரிசி’ விற்பனை; 1 கிலோ ரூ.29 என விலை நிர்ணயம்: மத்திய அரசு

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகம் செய்யும் மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி’ வரும் 9-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி’ விற்பனை வரும் 9-ம் தேதி … Read more