மருந்துகளின் விலை 12% வரை உயர்வா? – மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ஏப்ரல் முதல் மருந்துகளின் விலை 12% வரை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024 ஏப்ரல் முதல் மருந்துகளின் விலை 12% வரை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வால் 500-க்கும் மேற்பட்ட மருந்துகள் பாதிக்கப்படும் என்றும் இந்தச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய செய்திகள் தவறானவை, தவறாக … Read more

பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் – காங்கிரஸை ‘கைகழுவியது’ ஏன்?

புதுடெல்லி: 2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெற்றவர் விஜேந்தர் சிங். இவர், 2006 மற்றும் 2014ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 2009 மற்றும் 2010ல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். தொடர்ந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரராக … Read more

இந்தியா கூட்டணிக்கு அடுத்த அதிர்ச்சி: ஜம்மு காஷ்மீரில் முரண்டுபிடிக்கும் கூட்டணி கட்சிகள்

Lok Sabha Elections: மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மகன் உமர் தெரிவித்துள்ளார். 

“ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காப்பதற்கான தேர்தல் இது” – ராகுல் காந்தி @ வயநாடு

வயநாடு: “நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல்” என்று வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கான போராட்டம்தான் இந்தத் தேர்தல். ஒருபக்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் … Read more

‘புற்றுநோயால் அவதியுறுவதால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’- சுஷில் மோடி அறிவிப்பு

பாட்னா: கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் அவதியுறுவதால் இந்த மக்களவைத் தேர்தலில் என்னால் போட்டியிடவோ, பிரச்சாரத்தில் பங்கேற்கவோ முடியாது என்று பாஜக மூத்த தலைவரும், பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “கடந்த ஆறு மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதனை இப்போது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணருகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் … Read more

2023-24ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்: உலக வங்கி

World Bank About Indian Economy Growth: 2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸை சமாளிக்க‌ பாஜக, மஜத தலைவர்களுடன் அமித் ஷா வியூகம்

பெங்களூரு: கர்நாடகாவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக, மஜத மற்றும் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் கர்நாடக‌ பாஜக தலைவர்கள் ஆகியோருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். வருகிற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதால், அதனை சமாளிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிருப்தியாளர்களுக்கு சமாதானம்: இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் … Read more

டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி: 5 ஆண்டுகளில் ரூ.254 கோடி அதிகரிப்பு

பெங்களூரு: பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.254 கோடி அதிகரித்திருப்பது தேர்தல் பிரமாணப் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் 4ம் முறையாக காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 27 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. ஆனால் டி.கே.சுரேஷ் மட்டும் மோடி அலையை … Read more

10 நாள்களில் 4.5 கிலோ எடை குறைந்த அரவிந்த் கெஜ்ரிவால்… திஹார் ஜெயிலின் பதில் என்ன?

Arvind Kejriwal Health Update: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து, அவர் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

4 வயது மகனை கழுத்தை நெறித்து கொன்ற பெங்களூரு பெண் சிஇஓ – குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி

பெங்களூரு/பனாஜி: பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெண் சிஇஓ தன் 4 வயது மகனை விஷம் கொடுத்து கொலை செய்யவில்லை; கழுத்தை நெறித்தே கொலை செய்திருக்கிறார் என கோவா போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த சுச்சானா சேத் (39) பெங்களூருவில் The Mindful AI Lab என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்த … Read more