ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பாய் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவரும் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான சம்பாய் சோரன் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக செயல்பட்டு … Read more

“வட இந்திய மாநிலங்கள் பின்தங்கியதற்கு காங்கிரஸே காரணம்” – டி.கே.சுரேஷுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

புதுடெல்லி: வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ், வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை தனி நாடாக பிரிக்க வேண்டி வரும் எனக் கூறி இருக்கிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில், … Read more

கொரியர்களின் பாட்டி இராமருக்கு பேத்தி! கொரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அயோத்தி இளவரசி!

Indian Princess Suriratna Alias Korean Empress: அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியை லட்சக்கணக்கான தென்கொரியர்கள் பார்த்ததற்குக் காரணம் என்ன தெரியுமா?

கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது. இதை மீறி யாரேனும் கையால் கழிவுகளை சுத்தம் செய்ய வைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் சித்தராமையா எச்சரித்தார். கர்நாடக சமூக நலத்துறையின் சார்பில் 4 ஆயிரம் துப்பரவு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கையால் மலம் அள்ளுவது, மலத்தொட்டியில் இறங்கி சுத்தம் செய்வது போன்றவை நாட்டில் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

இடைக்கால மத்திய பட்ஜெட் 2024 ஹைலைட்ஸ்

புதுடெல்லி: முத்ரா திட்டத்தில் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் முன்னேற்றம் குறித்து அவர் கூறியதாவது: முத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்கள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வியில் மாணவிகளின் சேர்க்கை 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த படிப்புகளில் … Read more

வாராணசி நீதிமன்ற உத்தரவின்படி 30 ஆண்டுகளுக்கு பிறகு கியான்வாபி மசூதி வளாக வியாஸ் மண்டபத்தில் பூஜைகள் தொடங்கின

புதுடெல்லி: வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் காசி விஸ்வநாதர் கோயிலின் சிறிய மண்டபம் (வியாஸ் மண்டபம்) கியான்வாபி மசூதியை … Read more

ஜார்க்கண்ட்: ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு – 10 நாள் கெடு விதித்த ஆளுநர்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.   

அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம்: கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை: சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 – 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் சில எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தாசில்தார், விஏஓ மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு: சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் … Read more

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்க திட்டம்

புதுடெல்லி: மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ‘லட்சாதிபதி பெண்கள்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டுக்குள் … Read more

“இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது” – காங். எம்.பி சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது எனவும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இடைக்கால பட்ஜெட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய உரைகளில் இதுவும் ஒன்று. பட்ஜெட் உரையில் பெரிதாக எதுவும் இல்லை. வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள் மிகுந்து காணப்பட்டன. செயல்பாடுகளில் மிகக் குறைவான உறுதிப்பாடே இருந்தது. அந்நிய … Read more