‘சதி, நம்பிக்கை துரோகமே காரணம்’: உ.பி-யில் தோல்வி குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி குறித்து அதன் தேசிய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தொகுதிகளில் கட்சியினரும், தலைவர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் தோல்விக்கானக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் அதிக வெற்றியை பாஜக எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. இதன் கூட்டணிகளில் ராஷ்டிரிய லோக் தளம் 2 மற்றும் அப்னா தளம் 1 தொகுதிகளும் கிடைத்தன. அதேநேரம், எதிர்க்கட்சியான … Read more