தேசிய அரசியலில் இறங்குகிறார் அகிலேஷ் யாதவ்: உ.பி எதிர்க்கட்சி தலைவராகிறார் சித்தப்பா ஷிவ்பால்
புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முழுவீச்சில் தேசிய அரசியலில் இறங்குகிறார். இவர் வகித்த உபி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால்சிங் யாதவ் அமர்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகிவிட்டது சமாஜ்வாதி. இக்கட்சிக்கு உபியில் 37 மக்களவை தொகுதிகள் கிடைத்துள்ளன. இதன் வாக்கு சதவிகிதமும் உயர்ந்து 33.59 என்றாகி உள்ளது. இண்டியா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான சமாஜ்வாதியும், காங்கிரஸும் தனிப்பட்ட முறையில் … Read more