“பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள்” – பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி: “தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இருகட்சிகளும் … Read more