“5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி தளர்ந்துவிட்டது” – பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: “மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி. 5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி முற்றிலுமாக அதன் மதிப்பிழந்து, தளர்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26,மே 7, 13 ஆகிய நாட்களில் 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்த நிலையில், 5-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. உத்தர பிரதேசம் 14, … Read more

வி.கே.பாண்டியன் மீது பிரதமர் மோடி மறைமுக விமர்சனம் – பின்னணி என்ன?

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தபோதிலும், அம்மாநிலம் வறுமையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: ஒடிசாவில் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்கள் … Read more

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸின் 5 உத்தரவாதம் நிறைவேற்றப்படும்: ஜெய்ராம் ரமேஷ்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஓராண்டுஆட்சி சாதனைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியவதாவது: கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியுள்ளது. இதேபோல் மத்தியில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று ஜூன் 4-ம் தேதி ஆட்சிக்கு வந்ததும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியான ஐந்து … Read more

பிரியங்கா காந்தி மகள் மீது அவதூறு: காங்., புகாரின் பேரில் இமாச்சலில் வழக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா வத்ராவின் மகள் மீது ட்விட்டரில் பொய் தகவல்கள் பரப்பியதாக வழக்கு பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசக் காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார் செய்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்களை அரசியல்வாதிகள் முன் வைத்துக் கொள்கின்றனர். இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா மகள் மீது பொய்யானத் தகவல்கள் பரவி உள்ளன. இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவில், பிரியங்காவின் … Read more

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன” – மோடி பேச்சு

கிழக்கு சம்பரான்: காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டுகாலமாக நாட்டை நாசப்படுத்தி விட்டதாகவும், 3-4 தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “முதல் 5 கட்ட தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. முதல்கட்டத்தில் இண்டியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்த கட்டங்களில் இண்டியா கூட்டணி சரிந்தது. நேற்று நடந்த ஐந்தாம் கட்டத்தில் இண்டியா கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்தது. … Read more

உங்களின் 10 ஆண்டு கால பணிகளை பேசாமல் காங்கிரஸையே வசைபாடுவதா? – மோடிக்கு கார்கே கேள்வி

சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசின் 10 ஆண்டு கால பணிகள் பற்றிக் கூறாமல், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையே வசைபாடிக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகவும் வளமான மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இம்மாநிலங்களில் இன்னும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் 10 ஆண்டு காலப் பணி குறித்துப் பேசாமல், நாள் … Read more

Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது.. 270க்கு குறையாது -பிரசாந்த் கிஷோர்

Lok Sabha Election 2024: ஐந்து கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு முன், பாஜக கைப்பற்றும் இடங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார்.. அறிந்துக் கொள்ளுங்கள்

‘‘ஒடிசாவை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா?’’ – அமித் ஷா கேள்வி

புரி(ஒடிசா): தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கான தேர்தல். இந்த தேர்தல் 3 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல், ஜெகந்நாதரின் பெருமையையும் … Read more

புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!

Porsche Luxury Car Accident: சிறுவனுக்கு சட்டவிரோதமாக மது வழங்கிய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை சீல் வைத்தது.

மம்தா குறித்து அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா பானர்ஜி, நீங்கள் உங்களை எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்? உங்கள் கட்டணம் ரூ.10 … Read more