ஜெகன் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் தற்கொலை

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய்க்கு பந்தயம் நடந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் ரெட்டி (52). இவர் 7-வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினர். இவரது மனைவி விஜயலட்சுமி பஞ்சாயத்து தலைவராக … Read more

ஜேபி நட்டாவிற்கு பிறகு… பாஜக தலைவராக பதவி ஏற்க போவது யார்..!!

பாஜக தலைவர் ஜேபி நட்டா கேபினட் அமைச்சராக பதவியேற்றதன் மூலம் பிரதமர் மோடி அரசில் அங்கம் வகிக்கிறார். பிரதமர் மோடி அரசின் புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டதன் மூலம் பாஜக அமைப்பிலும் மாற்றத்திற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது. 

ஒரே பக்கமாக சாய்ந்த ஆந்திர மக்களின் தராசு முள்: ஜெகனின் அரசியல் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசும் ஆந்திர மக்கள்

அமராவதி: 2019 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்காலம் முடிவுக்கு வந்து விட்டதாக பலர் பேசினர். சந்திரபாபு நாயுடு மீண்டெழுவது முடியாத காரியம் என நினைத்தனர். ஆனால், அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த அரசியல் அனுபவத்தால் அவர் தற்போது மீண்டெழுந்துள்ளார். ஆந்திராவின் முதல்வராக மட்டுமல்ல, மத்தியில் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அளவுக்கு மீண்டுள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எவ்வளவு தரக்குறைவாக இவரை விமர்சித்தாலும் இவர் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. எதிர்க்கட்சி … Read more

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு: துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே … Read more

விவசாயிகளுக்கு நிதி: 3-வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து

புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டுள்ளார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். … Read more

மோடி 3.0 அமைச்சரவையின் ‘கேரள சர்ப்ரைஸ்’ – பாஜகவின் கிறிஸ்தவ முகம் ஜார்ஜ் குரியனின் பின்புலம்

கோட்டயம்: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் கேரள பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படும் ஜார்ஜ் குரியனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேரளாவில் இருந்து 2 பேர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் நடிகர் சுரேஷ் கோபி அமைச்சராக … Read more

கங்கனா ‘பயங்கரவாதம்’ என்றதும், அவரை பெண் காவலர் அறைந்ததும் தவறுதான்: பஞ்சாப் முதல்வர்

புதுடெல்லி: “விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கோபமடைந்திருக்க கூடும். இதனால் அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். இருப்பினும் இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “விசாயிகள் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கோபமடைந்திருக்க கூடும். இதனால் அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு … Read more

“மணிப்பூரில் வன்முறை தடுக்கப்பட வேண்டும்” – மத்திய அரசுக்கு மோகன் பாகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: “மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். மணிப்பூர் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும். அங்கே வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “கடந்த ஓராண்டாக மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த மாநிலம் அமைதியாகவே இருந்து வந்தது, ஆனால் திடீரென மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அங்கே தலைதூக்கியுள்ளது. மணிப்பூர் பிரச்சினையை … Read more

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன?

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பின் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் ஈட்டியவர் வி.கே. பாண்டியன். அதன் காரணமாகவே, அவரை நவீன் பட்நாயக் தனது அலுவலக அதிகாரியாக நியமித்தார். சுமார் 12 ஆண்டு காலம் நவீன் பட்நாயக்கின் அலுவலக அதிகாரியாக … Read more

அமித் ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை?

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்: பிரதமர் மோடி – மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை அமித் ஷா – உள்துறை நிதின் கட்கரி – மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை … Read more