Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News… AI மூலம் Exit Poll… துல்லியமான கருத்துக்கணிப்பு!

Lok Sabha Election Result 2024: நமது Zee News ஊடகத்தின் AI Exit Poll முடிவுகள், தற்போதைய நிலவரத்தை கச்சிதமாகவும், துல்லியமாகவும் கணித்தது குறிப்பிடத்தக்கது.

“இது மோடியின் தோல்வி” – தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி. இந்த தேர்தலில் பாஜக ஒற்றை முகத்தை காண்பித்து வெற்றிபெற நினைத்தது. அது மோடியின் முகம். தற்போது பாஜக பெரும்பான்மையை பெறத் தவறியது என்பதால், இது மோடியின் தோல்வி.” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கட்சி … Read more

சீட்டுக்கட்டாய் சரிந்த பங்குச் சந்தை… 4000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு..!!

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது, பிஎஸ்இ சென்செக்ஸ் 6000 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 

“முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்?” – தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், “வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படுவது ஏன்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், “தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏன் தேர்தல் முடிவுகள் வேகமாக புதுப்பிக்கப்படவில்லை. கடந்த சில மணிநேரமாக ஏன் இந்த செயல்முறை மெதுவாக உள்ளது? வேகத்தை குறைக்க உத்தரவு எங்கிருந்து வந்தது?. … Read more

Lok Sabha Election Result 2024 : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கியது எப்படி?

Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெறமுடியவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  

“மக்களால் புறக்கணிக்கப்பட்டது மோடி அரசு!” – ராகுல் காந்தி @ தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார். “இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்” என்று ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார். … Read more

ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!

AP Assembly Election Result 2024 : ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆட்சியில் இருக்கும் ysr congress இந்த முறை படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கிறது. 

ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது தெலுங்கு தேசம்; ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தோல்வி!

அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது இக்கூட்டணி. தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடம் கூட வெற்றிபெறவில்லை. குப்பம் தொகுதியில் … Read more

Lok Sabha Election Results 2024 : சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து… பாஜகவுக்கு செக்..!

Lok Sabha Election Results 2024 :  ஆந்திராவில் ஆட்சியை பிடித்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு தெரிவிக்கபோகும் என சந்திரபாபு தெரிவிக்க இருந்த நிலையில், அவரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தில் பாஜக தோல்வி: 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வெற்றி

புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உ.பி. முதல் மத்தியில் ஆட்சி அமைப்பது வரை காரணமாக இருப்பது எனக் கருதப்பட்டது அயோத்தி தொகுதி. இங்கு பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது. தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் … Read more