பந்துவீச்சாளர்கள் பாவம் இல்லையா.. ஐபிஎல் விதிகளுக்கு எதிராக பொங்கிய முகமது கைப்

Mohammad Kaif : ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என யூடியூப் சேனல் ஒன்றுக்கு முகமது கைப் பேட்டியளித்துள்ளார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளதாகவும், உடனடி மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் கிரிக்கெட்டின் சமநிலை சீர்குலையும் என்றும் அவர் அதிரடியாகப் பேசியுள்ளார். ராஜீவ் மக்னி (Rajiv Makhni) உடனான நேர்காணலில் பங்கேற்ற முகமது கைப், ஐபிஎல் விதிகளில் தான் விரும்பும் இரண்டு மிக முக்கியமான மாற்றங்களை முன்வைத்துள்ளார். Add Zee News … Read more

இந்தியா – நியூஸிலாந்து தொடர்: காரணமே இல்லாமல் நீக்கப்பட்ட 5 வீரர்கள்!

வரும் ஜனவரி 11 முதல் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் பல முக்கிய வீரர்களின் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில் இந்த தொடரில் காயத்திற்கு பிறகு திரும்பி உள்ளதாலும், ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி உள்ளதாலும் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பின்வரும் 5 வீரர்களும் அணியில் இடம் பெற்று இருக்கலாம் என்றும், இவர்களை தேவையில்லாமல் நீக்கி … Read more

ஐபிஎல்லில் இருந்து நீக்கம்! முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு நஷ்டஈடு எவ்வளவு கிடைக்கும்?

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து பிசிசிஐயின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவருக்கு எந்தவித நிதி இழப்பீடும் வழங்க  வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2026 ஏலத்தில் முஸ்தபிசூர் ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளால் போட்டி போடு ஏலம் கேட்கப்பட்டார். இறுதியில் கொல்கத்தா அணி அவரை ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது … Read more

இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் ஷிகர் தவான்.. மணப்பெண் யார் தெரியுமா?

Shikhar Dhawan Latest News: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான். இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக ஐசிசி தொடர்களில் இவரது பங்களிப்பு என்பது மிகவும் பெரியது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிய ஷிகர் தவான் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் வீரர்கள் அவரது இடத்தை நிரப்பினர். ஷிகர் தவார் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். பின்னர் 2024ஆம் ஆண்டில் … Read more

16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட் …

ஐக்கிய அரபு நாடுகளில் 2025/26 சர்வதேச லீக் டி20 பிரீமியர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் இறுதிப்போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெசர்ட் அணி 20 ஓவரில் 182/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74* (51) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பகார் ஜமான் 20, … Read more

இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்! இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

India vs Newzeland: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வில் உள்ளனர். கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஓய்விற்கு பிறகு அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா தொடரில் காயத்தால் விலகி ஓய்வில் இருந்த சுப்மன் கில், மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்த தொடரை வழிநடத்த உள்ளார். … Read more

வங்காளதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை

டாக்கா, 2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடருக்கான மின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அதேவேளை, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் இந்து மதத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து … Read more

சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி…19 பந்துகளில் அரைசதம் அடித்து அபாரம்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஆயுஸ் மாத்ரேவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இந்திய அணியை சூர்யவன்ஷி வழிநடத்துகிறார். இவ்விறு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேசன் ராவ்ல்ஸ் (114; 113 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சதம் அடித்தார். இந்திய … Read more

டி20 உலகக் கோப்பை: முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்? முழு விவரம்

Mohammed Siraj Latest News: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையிதான் பங்கேற்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. அதனை இம்முறை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்கள் அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  … Read more

விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

மும்பை, 33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. அந்த வகையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டு வந்தார். ஆனால், பயிற்சியின்போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நடப்பு விஜய் ஹசாரே … Read more