மும்பைக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் திரிபாதிக்கு பதிலாக 17-வயது வீரர் ஆயுஷ் மாத்ரே
மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டிக்கான சென்னை அணியில் ஒரே மாற்றமாக ராகுல் திரிபாதிக்கு பதிலாக 17- வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். … Read more