பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் பியாஸ்ட்ரி முதலிடம்
சாகிர், இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள சாகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோமீட்டராகும். இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மெக்லரன் அணி வீரரான ஆஸ்கர் பியாஸ்ட்ரி (ஆஸ்திரேலியா) 1 மணி 35 நிமிடம் 39.435 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் … Read more