கடைசி சர்வதேச போட்டியை மும்பையில் விளையாடியது ஏன்..? சச்சின் விளக்கம்

மும்பை, மும்பையில் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதன் 50 ஆண்டுகால கொண்டாட்டம் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மும்பையைச் சேர்ந்த சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ரவிசாஸ்திரி, ரஹானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தம்முடைய வாழ்நாளின் கடைசி சர்வதேச போட்டியை வான்கடே மைதானத்தில் விளையாடியது பற்றி சச்சின் நினைவு கூர்ந்தார். குறிப்பாக தாம் 24 வருடங்கள் … Read more

"ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" – சுரேஷ் ரெய்னா!

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 09ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.  பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தொடருக்காக பாகிஸ்தானை தவிர்த்து அனைத்து நாடுகளும் தங்களது அணியில் விளையாடக்கூடிய வீரர்களின் பட்டியல் அறிவித்துவிட்டது.  அணி தேர்வில் இருந்த குழப்பங்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்த இந்திய அணியும் நேற்று முன்தினம் அணியின் வீரர்கள் விவரத்தை … Read more

இந்திய அணியில் இடமில்லை, விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் ஸ்டார் பவுலர்

Umesh Yadav Retirement | இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் உமேஷ் யாதவ். அவரை கடந்த ஒன்றரை வருடமாக இந்திய அணி எந்த தொடருக்கும் தேர்வு செய்யவில்லை. தேர்வுக்குழு தொடர்ச்சியாக அவரை புறக்கணித்து வருவதால். விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளார் அவர். ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் கடைசியாக 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடினார். அந்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில்கூட … Read more

"நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.." வலைப் பயிற்சியை தொடங்கிய முகமது ஷமி!

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு அறுவை சிகிச்சை காரணமாக ஓராண்டுக்கு மேலாக சர்வேதச போட்டியில் விளையாடாத முகமது ஷமி மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியனஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியின் பெயர் இடம்பெற்றுள்ளது.  அதற்கு முன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெறும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ஒருநாள் தொடரிலும் முகமது ஷமி பங்கேற்க உள்ளார்.  … Read more

பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டுகளாக திறமையான ஆல் ரவுண்டராக பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் இருந்து வருகிறார். மிகவும் திறமையான பந்துவீச்சாளராக கருதப்படும் இவர் பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை டாக்கா நீதிமன்றம், புகழ்பெற்ற வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த கைது வாரண்ட் IFIC வங்கியுடன் இணைக்கப்பட்ட காசோலை சம்பந்தப்பட்ட வழக்குடன் தொடர்பானது. இந்த வழக்கில் ஷகிப் அல் ஹசனின் … Read more

Champions Trophy: ரிஷப் பந்தா? கேஎல் ராகுலா? இந்திய அணி எடுத்துள்ள முக்கிய முடிவு!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முறையே பிப்ரவரி 6, 9 மற்றும் 12ஆம் தேதி நாக்பூர், கட்டக் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. கிட்டத்தட்ட இரண்டு தொடர்களுக்கும் ஒரே அணியை அறிவித்துள்ளனர். அதில் காயம் … Read more

சஜித் கான் அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய பாகிஸ்தான்

முல்தான், பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 230 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களும் அடித்தன. பின்னர் 93 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் அடித்து 202 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கம்ரான் குலாம் 9 ரன்களுடனும், ஷாத் ஷகீல் 2 ரன்களுடனும் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) – பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை 7-5, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கார்லஸ் அல்காரஸ் கைப்பற்றினார். தொடர்ந்து 3வது செட் தொடங்கும் முன்னர் ஜாக் டிராப்பர் காயம் … Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

கோலாலம்பூர், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 13.2 ஓவர்கள் … Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசை 44 ரன்களில் சுருட்டிய இந்தியா

கோலாலம்பூர், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். வெறும் 13.2 ஓவர்கள் … Read more