இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற எத்தனை வெற்றிகள் பெற வேண்டும்?

India cricket team, World Test Championship Final | இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் நான்கு டெஸ்ட் போட்டிகளின் வெற்றி தோல்வி முடிவுகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் பெரும் … Read more

ஐ.பி.எல்.: சென்னை அணி என்னை வாங்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான் – தீபக் சஹார்

மும்பை, ஐ.பி.எல். மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இதில் நீண்ட வருடங்களாக ஒரே அணியில் விளையாடி வந்த வீரர்கள் பலர் வேறொரு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்சில் விளையாடி வந்த தீபக் சஹார் மும்பை அணிக்காக வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீபக் சஹார் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் … Read more

சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி

இந்தூர், 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி கார்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய 90 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் குர்ஜப்னீத் சிங் ஆட்டமிழந்தார். … Read more

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்… ஓப்பனிங் இல்லை – இந்த இடத்தில்தான் பேட்டிங்!

India National Cricket Team: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார், ஹேசில்வுட் காயம் காரணமாக டாம் போலண்ட் ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனுக்குள் வர இருக்கிறார். அறிமுக வீரர்களை ஆஸ்திரேலியாவும் தனது ஸ்குவாடில் சேர்த்துக்கொண்டுள்ளது. முதல் போட்டி மட்டுமே நிறைவடைந்த நிலையில் இத்தொடருக்கு மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் டிச. 6ஆம் … Read more

சையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகா அபார பந்துவீச்சு.. 90 ரன்களில் சுருண்ட தமிழக அணி

இந்தூர், 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி ஆரம்பம் முதலே கார்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்களான பாபா இந்திரஜித் (5 ரன்கள்), ஜெகதீசன் (0), … Read more

6 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த ஹர்ஷித் ராணா! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு கம்மிதான்!

கான்பெராவில் நடைபெற்று வரும் Prime Ministers XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 131 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது Prime Ministers XI அணி. இந்த சமயத்தில் ஹர்ஷித் ராணா 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 40 ரன்களுடன் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜாக் கிளேட்டன், ஹர்ஷித்தின் 23வது ஓவரின் நான்காவது … Read more

ஐ.பி.எல். 2025: விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் – இந்திய முன்னணி வீரர் உறுதி

பெங்களூரு, ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..? வெளியான தகவல்

துபாய், 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் … Read more

IND vs AUS 2nd Test : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கும் 3 மிகப்பெரிய மாற்றங்கள்

IND vs AUS 2nd Test Updates : பார்டர் கவாஸ்கர் டிராபியில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்கிறது. பிங்க் நிற பந்தில் பகலிரவு போட்டியாக நடக்கும் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது. கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இப்போட்டியில் களமிறங்குகிறார். அதேபோல் காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த சுப்மன் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சினின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜோ ரூட்

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன ஜோ ரூட் 2-வது இன்னிங்சில் 23 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனை ஒன்றை தகர்த்துள்ளார். அதன் விவரம் … Read more