பாரா ஒலிம்பிக்; வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 ஆட்டத்தில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் கடந்த 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். … Read more