சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, லக்சயா சென் வெற்றி

ஷென்ஜென், சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட்டில் பூசனன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மலேசியாவின் … Read more

புரோ கபடி லீக்; டெல்லி – குஜராத் ஆட்டம் 'டிரா'

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின . விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின … Read more

கேரளா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி… பினராயி விஜயன் பெருமிதம்

திருவனந்தபுரம், உலக சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிலையில் , அர்ஜென்டினா அணி கேரளா வருவது குறித்து அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது , உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகிறது. இதனால் கேரளா வரலாறு படைக்க உள்ளது. மாநில அரசின் … Read more

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் இந்த பாஸ்ட் பௌலர்… பலம் பெறும் இந்திய அணி!

India vs Australia Perth Test: பார்டர் – கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடருக்கு இந்திய அணி (Team India) தற்போது கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நாளை மறுதினம் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதே பெர்த் நகரில் உள்ள WACA மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.  ரோஹித் சர்மா (Rohit Sharma) முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்பதால் முன்னரே … Read more

IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் செம ஹைலைட் என்னவென்றால், இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் பிளேயர்களில் 8 பேர் முதன்முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். அவர்கள் களத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு, பேட்டிங்கை சந்திக்க இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் உள்ள 8 பிளேயர்கள் யார்? என்பதை பார்க்கலாம்.  யார் அந்த 8 … Read more

இந்திய அணிக்கு பெரிய தலைவலி… அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!

India vs Australia Perth Test: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) நாளை மறுதினம் (நவ. 22) தொடங்க உள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டியை காலை 7.50 மணி முதல் நேரலையில் காணலாம். இந்திய அணிக்கும் … Read more

புரோ கபடி லீக்; புனேரி பால்டன் – உ.பி.யோத்தாஸ் ஆட்டம் 'டிரா'

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின . இதனால் ஆட்டம் 29-29 … Read more

கேப்டனாக களமிறங்கும் புவனேஷ்வர் குமார்.. எந்த தொடரில் தெரியுமா..?

லக்னோ, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள அணிகள் வரிசையாக தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேசமும் தனது அணியை அறிவித்துள்ளது. அந்த அணிக்கு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் … Read more

நான் மற்றும் புஜாரா இல்லாததை அவர் பார்த்துக்கொள்வார் – டிராவிட் நம்பிக்கை

மும்பை, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வென்றது. அந்த வெற்றிக்கு புஜாரா மிகவும் முக்கிய பங்காற்றினார். ஆனால் தற்போது இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவர் இல்லாதது இம்முறை இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து … Read more

விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – கங்குலி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் … Read more