பெர்லின் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்

பெர்லின், பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜெசிகா பெகுலா 6-7 (0-7), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் காலின்ஸ்கயாவை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் … Read more

டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

பார்படாஸ், டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – அமெரிக்கா மோத உள்ளன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : T20 World Cup  England  America  Cricket  டி20 உலகக்கோப்பை  இங்கிலாந்து  அமெரிக்கா  கிரிக்கெட் 

டி20 உலகக்கோப்பை : ரன் அடிக்காததற்கு மொக்கை காரணத்தை விளக்கமாக சொன்ன ரோகித் சர்மா

வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்8 குரூப் போட்டியில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தை கெட்டியாக பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என … Read more

ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான் – பழைய கதை தெரியுமா?

டி20 உலக கோப்பை குரூப்8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அமர்களப்படுத்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான்அணி. லீக் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களம் கண்டது. அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆட சம்மதித்துவிட்டு, கடைசி நேரத்தில் கேன்சல் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பாடம் புகட்ட வேண்டும் … Read more

விராட் கோலியை முறைத்த பௌலர்… களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் – ஆக்ரோஷ வீடியோ!

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டது. வங்கதேச அணி நேற்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததே பெரும் கேள்வியை எழுப்பியது.  ஆடுகளம் பேட்டிங் சூழலுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்து வங்கதேச அணி … Read more

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான்… இந்திய அணிக்கு பெரிய ஆபத்து – காரணம் என்ன?

AUS vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது எனலாம். குரூப் சுற்று போட்டிகளிலேயே பல அணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளால் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையவே முடியவில்லை. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது. ஆனால், இதனை பலரும் கேள்விக்குட்படுத்தினர். இதுபோன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வந்தாலும் பலன் இருக்காது, பெரிய … Read more

டி20 உலகக்கோப்பை: பாண்ட்யா அதிரடி… இந்தியா 196 ரன்கள் குவிப்பு

ஆண்டிகுவா, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. … Read more

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியா – செக் குடியரசு ஆட்டம் டிரா

ஹாம்பர்க், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் … Read more

ஹாலே ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜன்னிக் சின்னெர்

பெர்லின், ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், சீனாவின் ஸ்ஹாங் ஸிஷென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சீனாவின் ஸ்ஹாங் ஸிஷெனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர், போலந்தின் ஹூபர்ட் … Read more

ஹாலே ஓபன் டென்னிஸ்: ஹூபர்ட் ஹர்காக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெர்லின், ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-2), 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : ஹாலே ஓபன் டென்னிஸ்  ஹூபர்ட் ஹர்காக்ஸ்  … Read more