‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார். சென்னை ஐஐடி​யில் இந்​திய ராணுவ ஆராய்ச்சி மைய​மான ‘அக்​னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்​தில் நடை​பெற்​றது. ராணுவ தளபதி உபேந்​திர திவேதி சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, மையத்தை தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். அடுத்த நாளான … Read more

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்

சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, அதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. ஆண்​டு​தோறும் குடியரசு தினம், சுதந்​திர தினம், காந்தி ஜெயந்தி உள்​ளிட்ட 6 முக்​கிய நாட்​களில் தமிழகத்​தில் உள்ள 12,482 கிராம ஊராட்​சிகளில் கிராமசபை கூட்​டங்​கள் நடத்​தப்​படும். இக்​கூட்​டங்​களின் வாயி​லாக, பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​படும். அந்த வகை​யில், வரும் ஆக. … Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர். படகிலிருந்த டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45), … Read more

களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்களுக்கான பிரத்யேகமான ‘கடல் ஓசை’ சமுதாய வானொலியின் பத்தாம் ஆண்டு விழா தொடக்க விழா நடைபெற்றது. கடல் ஓசை சமுதாய வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விழாவிற்கு தலைமை வகித்தார். எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தான்தின், வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன். துணை காவல் கண்காணிப்பாளர் மீரா, வள்ளலார் குழுமம் நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கே.வி.கே., குழுமம் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரா.ஞானசம்பந்தன் தலைமையில் மீனவர் குடும்பங்கள் முன்னேற்றத்திற்கு … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: செயல்படாத வங்கிக் கணக்கை கொடுத்துவிட்டீர்களா?

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு செயல்படாத வங்கிக் கணக்கை கொடுத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி

ராஜபாளையம்: சமூக நீதி, சுயமரியாதை பேசும் அதிமுக, திமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என யாருமே கவின் படுகொலையை கண்டிக்காததால், அவர்களை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும், என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மா. தற்போது அதற்கு … Read more

திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும்: கேபி முனுசாமி

திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பாசத்தால் இது போன்ற கருத்துக்கள் கூறுகிறார் என்று கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு: 3-ம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் 3-வது சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 87,227 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 92,423 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சிய 92,605 இடங்களுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் … Read more

இந்த காரணங்களுக்காக உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்! முழு விவரம்

Ration Card : தமிழ்நாட்டில் என்னென்ன காரணங்களுக்காக ஒருவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

இரவு நேரத்தில் பழைய குற்றாலம் செல்ல வாகனங்களுக்கு அனுமதி: வனத்துறை நடவடிக்கையால் சர்ச்சை

தென்காசி: தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் கடந்த ஆண்டு வரை இருந்தது. அப்போது பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பழைய குற்றாலம் அருவி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டது. கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பின்னர், காலை 6 மணி … Read more