உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் சந்தன் கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் வந்த அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. … Read more

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி: நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 டிசம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம்தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டூர்புரத்தை … Read more

“என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்

“படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை … Read more

“பாமகவில் அனைத்து அதிகாரங்களும் ராமதாஸ் வசம்!” – பேராசிரியர் தீரன் கருத்து

விழுப்புரம்: “பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனர் ராமதாசிடம் மட்டுமே உள்ளது” என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸை, பேராசிரியர் தீரன் இன்று (ஜூன் 2) சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பை சேர்ந்தவரும், பொதுச் … Read more

சென்னை மெட்ரோ சைலாண்டாக செய்த பெரிய சம்பவம்… நாட்டில் இதுவே முதல்முறை!

Chennai Metro Rail: இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெரிவித்துள்ளது.

‘திருவிழா இல்லாத காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை’ – வாகை சந்திரசேகர்

திருநெல்வேலி: “தமிழகத்தில் திருவிழா இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார். திருநெல்வேலியில் மண்டல அளவிலான நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திருநெல்வேலி மாவட்ட … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரி மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு 

மதுரை: மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி, மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜூன் 2) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் … Read more

யார் இந்த SIR புரளிக்கு Full Stop! ஞானசேகரனின் மொபைலே முக்கிய சாட்சி – என்ன மேட்டர்?

Anna University Sexual Assault Case: இனிமேலும், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

தூய்மை மிஷனில் இணைந்து செயல்படுவோம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நகரின் தூய்மை என்பதில் … Read more

மழைக்கு குட் பாய்.. இனி வெயில் கொளுத்த போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

TN weather update: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று (ஜூன் 02) முதல் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.