சுதந்திர தின தொடர் விடுமுறை: 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு

சென்னை: சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆக.13, 14, 15-ம் தேதி களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 1,320 பேருந்துகள் … Read more

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம்! வெளியானது புதிய அப்டேட்!

தமிழக அரசின் மின்னணு கழகமான எல்காட் (ELCOT) வெளியிட்ட சர்வதேச டெண்டரில், மூன்று நிறுவனங்கள் தங்களது மடிக்கணினி விலைப்புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன.

திருச்சி | மாடு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம் 

திருச்சி: ​விருத்​தாசலம் அருகே தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதி​ய​தில் வந்தே பாரத் ரயி​லின் முன்​பகுதி சேதமடைந்​தது. சென்னை எழும்​பூரிலிருந்து திருநெல்​வேலிக்கு நேற்று முன்​தினம் மாலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்​தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்​ற​போது, திடீரென தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற மாட்​டின் மீது ரயில் மோதி​யது. இதில், ரயி​லின் ஏரோடைனமிக் (முன்) பகுதி சேதமடைந்​தது. மாடும் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தது. இதனால், சுமார் 15 நிமிடங்​கள் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. … Read more

பெண் குழந்தை இருக்கிறார்களா? தமிழக அரசு வழங்கும் ரூ.50,000! எப்படி பெறுவது?

பெண் குழந்தைகளை வைத்துள்ள குடும்பங்களில் நிதி பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பழநி முருகன் கோயில் நிதி மூலம் திருமண மண்டபம் கட்டுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: ஐகோர்ட் மதுரை அமர்வு

மதுரை: பழநி முரு​கன் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டும் விவகாரத்​தில், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை எழு​மலை​யைச் சேர்ந்தராம ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பழநி தண்​டா​யுதபாணி சுவாமி கோயிலுக்​குச் சொந்​த​மான நிதி​யில் இருந்து ரூ.4.54 கோடி மதிப்​பில், உத்​தமபாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது. இது அறநிலை​யத் துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்டக் … Read more

அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் கவனத்திற்கு! தமிழக அரசு செய்துள்ள மாற்றம்!

கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் கடமை என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2 பட்​டாசு நிறுவன உரிமை​யாளர்​களின் வீடு​கள் மற்றும் அலு​வல​கங்​கள், சிவ​காசி​யில் இருந்து வடமாநிலங்​களுக்கு பட்​டாசுகளை கொண்டு செல்​லும் 2 டிரான்​ஸ்​போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் குழுவினர் நேற்று முன்​தினம் காலை 10 மணி முதல் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சோதனை​யில் பட்​டாசு விற்​பனை … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழை

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து 48 மணி நேரத்தில் இது வலுவடையக்கூடும். தென்னிந்தியப் பகு​தி​களின் … Read more

சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். இதுதவிர, ஊராட்சி மன்ற … Read more

அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

விழுப்புரம்: செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக.12) கடிதம் அனுப்பியுள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பொதுக்குழுக் கூட்டத்தை தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தி முடித்தார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று … Read more