ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தல்: சவுதியில் இருந்து நாகை தொழிலாளியை மீட்டு நாதக உதவி

சவுதி அரேபியாவில் தோட்ட வேலை என்று கூறி ஏமாற்றி, ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தப்பட்ட நாகை தொழிலாளியை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரூ.1.5 லட்சம் கொடுத்து மீட்டனர். நாகை மாவட்டம் பெரிய தும்பூரைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (45). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி உதயஜோதி. இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்பிய கவாஸ்கரை, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தோட்ட வேலைக்கு … Read more

மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

ஊதியம் வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: மே மாத ஊதியத்தை இதுவரை வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாள் அன்று சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன் 4) வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று (ஜூன் 4) காலை 11.30 மணி அளவில் … Read more

தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வெளியிட்டிருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu government Major announcement : தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

அம்பையில் தாமிரபரணியின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய 20 பேர் மீட்பு

அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது நீர்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்ட பெண்கள் உட்பட 20 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அம்பா சமுத்திரம், காசி நாதர் கோயில் அருகில் தாமிரபரணி ஆற்றில் நேற்று மதியம் கல்லிடைக் குறிச்சி, நெசவாளர் குடியிருப்பு, வைராவிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்தனர். ஆற்றின் நடுவே உள்ள பாறை பகுதியில் அவர்கள் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் நீர்வரத்து … Read more

மாம்பழ விலை வீழ்ச்சி: விவசாயிகள் நலன் காக்க அரசே விலை நிர்ணயிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் விவசாயிகளும், மரங்களை குத்தகைக்கு எடுத்தவர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் … Read more

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டுகோள்

சென்னை: இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் தற்போது சித்தாந்த ரீதியாக பல துன்பங்களை வேதனைகளை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக இந்துக்கள் சொல்லிக்கொள்ள முடியாத துயரங்களை இந்த திராவிட மாடல் அரசால் பெறுகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் … Read more

ராஜ்யசபா சீட்டிற்காக கமல்ஹாசன் இப்படி பேசுகிறார் – தமிழிசை சௌந்தரராஜன்!

திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டிற்காக மொழியை பற்றி பேசினால் அவர்கள் மகிழ்வார்கள் என்று நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரிக்காதீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது என சீமான், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என்று மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றமும், கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இவ்விவகாரத்தில் மன்னிப்பு தான் தீர்வு என … Read more

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

திருநெல்வேலி / விருதுநகர்: வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: … Read more