ரயில்வே கேட்களை கடக்கும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை: ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர். ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சர்வதேச … Read more

வருவாயை அதிகரிக்க மதுபானங்களை தொடர்ந்து புதுச்சேரியில் பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு

புதுச்​சேரி: புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் செலவாகும். இதற்கு வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மதுபானங்களுக்கான கலால்வரியை அரசு ஏற்கெனவே உயர்த்தியது. … Read more

ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

தவெக – தேமுதிக கூட்டணியா? ஜன.9 மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும்: விஜய பிரபாகரன் தகவல்

கரூர்: தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், … Read more

நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ‘அன்றைய தினம் சென்னையில் கனமழை … Read more

ராமதாஸ் – அன்புமணி இடையே விரைவில் சமாதானம்: ஜி.கே.மணி நம்பிக்கை

திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “ராமதாஸும், அன்புமணியும் 45 நிமிடங்கள் பேசினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருவரும் சந்திக்கவில்லை என்று தவறான தகவலைப் … Read more

இன்று பக்ரீத் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை … Read more

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு உறுதி

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையிலும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் … Read more

சிவகாசியில் ரூ.30 லட்சம் மதிப்பில் பட்டாசு தொழிலாளி நினைவுச் சிலை திறப்பு

சிவகாசி: சிவகாசி காரனேசன் சந்திப்பில் பட்டாசுத் தொழிலாளியின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நினைவுச் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சார்பில் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பட்டாசு தொழிலாளியின் நினைவு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விருதுநகர் சாலையில் நகரின் நுழைவுப் பகுதியான காரனேசன் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை உருவாக்க ரூ.30 லட்சம் நிதி … Read more

ஞானசேகருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. மா. சுப்பிரமணியன் விளக்கம்!

Minister Ma. subramanian: குற்றவாளி ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.