தமிழக செய்திகள்
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: மகளிருக்கான இலவச விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது என்று மாநிலத் திட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.22) தலைமைச் … Read more
Crime In Tamil Nadu | மாணவர்களிடம் 5000 – 20000 ரூபாய் வரை லஞ்சம் பெற்ற பேராசிரியர்
Crime In Tamil Nadu: மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக ஜிபே (Gpay) மூலம் பெற்ற பேராசிரியர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுகவினர் கடிதம்
சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கிறீர்களா? இல்லையா? என்பதை கடிதம் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவுவை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். … Read more
இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்..! பிரேக் அப் செய்த சென்னை சிறுமிக்கு கத்திக்குத்து!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமி தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் வாலிபர் அச்சிறுமியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக: ராமதாஸ்
சென்னை: ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும் பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் … Read more
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக அமைதி தின விழா கொண்டாட்டம்
சென்னை: பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்டம் 324L சார்பாக மேற்கு சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி குழும பள்ளி வளாகத்தில் உலக அமைதி தின விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட ஆளுநர் லயன் எஸ்.கே.கருணாகரன், வேளாங்கண்ணி குழும தாளாளர் எஸ்.தேவராஜ், இணைத் தாளாளர் டெல்பின் தேவராஜ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் உரிமையாளர் மனோகரன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் அரிமா சங்கம் சார்பில் டெங்கு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச் சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு … Read more
தங்கக் கட்டிகள் இருப்பதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது
திருச்சியில் தங்கக் கட்டிகள் இருப்பதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 1 கிலோ தங்கம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.