மகளிர் உரிமை தொகை: வங்கி கணக்கில் பணம் வரவில்லையா? வீடு தேடி வருகிறது மணி ஆர்டர்..!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில வங்கி கணக்கில் பணம் வராதவர்களுக்கு மணி ஆர்டர் மூலம் வீடு தேடி பணம் வந்து சேரும் என அரசு அறிவித்துள்ளது.   

“காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க தமிழக அரசு இனி என்ன செய்யப் போகிறது?” – ராமதாஸ் கேள்வி

சென்னை: ”காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இந்நிலையில், காவிரி படுகை உழவர்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?” என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு மலைபோல நம்பிக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவால் அந்த நம்பிக்கை சிதைந்து விட்டது. காவிரி மேலாண்மை … Read more

“அவளுடன் நானும் இறந்து விட்டேன்..” மகள் குறித்து உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி!

Vijay Antony Post about his Daughter: விஜய் ஆண்டனி, தனது மகள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நெல்லை – சென்னை 'வந்தே பாரத்' ஒத்திகை தொடக்கம் – செப்.24 முதல் ரயில் இயக்கம்

மதுரை: நெல்லை – சென்னை இடையே ‘வந்தே பாரத்’ துரித ரயில் செப்டம்பர் 24 முதல் இயக்கப்படுகிறது. இதற்கான ஒத்திகை ரயில் இன்று மதியம் 1.30 மணிக்கு மதுரை ரயில் வந்தடைந்தது. இதன்பின், நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது. நெல்லை – சென்னை உட்பட இந்தியா முழுவதும் 9 ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை செப்டம்பர் 24-ல் பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக நெல்லை – மதுரை மற்றும் சென்னை இடையே அந்தந்த ரயில்வே … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு | பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற உதயநிதிக்கு இடைக்கால தடை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் … Read more

ஆசைக்கு இணங்காத அண்ணி.. அண்ணன் மகனையே கொன்ற கொடூர சித்தப்பா! அதிர்ச்சி பின்னணி!

Child Found Dead in Speaker Box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.     

காரைக்குடி ரயில் நிலையத்தில் அளவில்லா சிரமங்கள்

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் வசதிகள் குறைவால் பயணிகள் அன்றாடம் அளவில்லாத சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். காரைக்குடி ரயில் நிலையம் முக்கியச் சந்திப்பாக உள்ளது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளன. வாராந்திர ரயில்கள் உட்பட 26 ரயில்கள் நின்று செல்கின்றன. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வசதி குறைவான, கவனிப்பில்லாத நிலையமாக உள்ளது. ரூ.2.34 கோடியில் மின்தூக்கியுடன் கூடிய புதிய நடைமேம்பாலப் பணி 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், 4 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் … Read more

ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து பைக் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் மதிப்பிலான பைக்குகளை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். 

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் மறுப்பு

காஞ்சிபுரம்: அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்.கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு … Read more

கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி – மேலும் 27 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள்

கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதால், சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.