அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் … Read more

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? நீதிமன்றம் சொன்ன உத்தரவு!

அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு உத்தரவு.  

முதுகுளத்தூரில் 5,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் தாலுகாவில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளில் 5 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. கடலாடியில் 41 மி.மீ., கமுதியில் 35 மி.மீ., முதுகுளத்தூரில் 25.1 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 611 மி.மீ. மழை பதிவானது. அதனால் பெரும்பாலான கிராமங்களில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. சில … Read more

தமிழ்நாடு பொங்கல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு, முன்பதிவில்லா ரயில்கள் முழுவிவரம்

Tamil Nadu Pongal Special Trains 2024: பொங்கல் விழாவையொட்டி ரயில்வே துறை சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களின் முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள். 

அரசுப் பள்ளிகளில் சமூகநீதி பாடல்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தில் இனி சமூகநீதி பாடல் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில்படித்த முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் ‘விழுதுகள்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட ‘சமூகநீதி’ உட்பட 10 கருத்துருக்கள் சார்ந்த பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை விளையாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

பழனிச்சாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் – ஓபிஎஸ் திட்டவட்டம்!

10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம் – ஓபிஎஸ்.  

அயலக தமிழர் தின விழா சென்னையில் இன்று தொடக்கம்: விருதுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் நாளை உரை

சென்னை: அயலகத் தமிழர் தின விழா சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நாளை விருதுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (ஜன.11, 12) … Read more

தலைமை நீதிபதி அறிவுறுத்தலை ஏற்று ஜன.19 வரை பஸ் ஊழியர் போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19 வரை தள்ளிவைக்க அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவுக்கு … Read more

'சேலம் பல்கலை.க்கு ஆளுநர் நுழைய முயன்றால்…' – தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

சென்னை: ஊழல் வழக்கில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்படுவாரேயானால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில் ஜெகநாதனின் பதவி … Read more