அண்ணா பற்றி அண்ணாமலை பேசிய விவகாரம்: திராவிட கட்சிகள் மீது திருப்பூர் சு.துரைசாமி அதிருப்தி

திருப்பூர்: “முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக பேசிய அண்ணாமலைக்கு திராவிட கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரையில் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக சொல்லி உள்ளார். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். அப்போது உடனிருந்த … Read more

நிதி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் திட்டத்தை கொண்டு வருவோம் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தொகுதி எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: மகளிருக்கு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்து … Read more

“கணவாய்ப்புதூர் பகுதியில் மக்களின் 382 ஏக்கர் நிலங்களைப் பறிக்க வருவாய்த் துறை துடிப்பதா?” – ராமதாஸ்

சென்னை: “சேலம் மாவட்டம் கணவாய்ப்புதூர் பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு சொந்தமான நிலங்களை, அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்று அறிவித்து, கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசின் வருவாய்த் துறை ஈடுபட்டிருக்கிறது. அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிக்கிறது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்குட்பட்ட கணவாய்ப்புதூர், கேதுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் பரந்து … Read more

தென்முடியனூர் கிராமத்தில் 8 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட கோயில்: பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ததால், கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயில் இன்று (செப்.23) மாலை திறக்கப்பட்டதும் பட்டியலின மக்கள் மீண்டும் வழிபாடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில், 80 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டன. இதை எதிர்த்து ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் … Read more

திமுக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோராவிட்டால் வழக்கு தொடரப்படும்: ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை

சென்னை: காந்தியடிகள் கொலையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டதற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925ம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 98 ஆண்டுகளாக பாரத தேசத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசபக்தி நிறைந்த இளைஞர்களை ஆர்எஸ்எஸ் உருவாக்கி … Read more

“கிராம மக்களை ஆலோசித்து திட்டங்கள் வகுக்கவேண்டும்” – கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலர் கருத்து

மதுரை: “கிராம மக்களை கலந்தாலோசித்து தீட்டப்படும் திட்டங்களால் மட்டுமே நிரந்தர வளர்ச்சி சாத்தியமாகும்” என கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.மீனாட்சிசுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று தானம் அறக்கட்டளையின் தானம் கல்வி நிலையம் சார்பில் ‘முன்னேறும் வளர்ச்சிக்கான புதியதோர் சமூக நெறியை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் 5 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதற்கு தானம் அறக்கட்டளை தலைவர் பி.டி.பங்கேரா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் மா.ப.வாசிமலை முன்னிலை வகித்தார். தானம் கல்வி நிலைய இயக்குநர் கி.குருநாதன் … Read more

சிறு, குறு தொழில் துறை மின்சார நிலைக் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை ஏற்று, மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்டண முறைகளை மாற்றி அமைத்திடுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், … Read more

தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டும் தான் – ஆளுநர் ரவி பேச்சு

Governor RN Ravi: ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

“உறுப்பு தானம் வழங்குவோருக்கு ஆகச் சிறந்த மரியாதை” – தமிழக அரசுக்கு அன்புமணி பாராட்டு

சென்னை: “உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது” என தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது பாராட்டப்பட … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வெற்று முழக்கமே தவிர, நடைமுறையில் சாத்தியம் இல்லை: வைகோ கருத்து

மதுரை: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மோடியால் தான் சாத்தியம் என அமித்ஷா கூறி இருப்பது குறித்த கேள்விக்கு அவர், “ஒன்பது ஆண்டு காலமாக என்ன செய்தார்கள், … Read more