யூனிடெக்கின் ரூ.125 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பரிவர்த்தனையில் அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யூனிடெக் நிறுவனத்தின் ரூ.125.06 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் குழுமம், அதன் விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அந்நிறுவனத்தில் வீடுகள் வாங்கியவர்களிடம் பண மோசடி செய்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கெனவே, யூனிடெக் குழுமம் மற்றும் அதன் தொடர்புடைய … Read more

செப் 29 முதல் அக்.1 வரை வாஷிங்டனில் ‘உலக கலாச்சார விழா’: வாழும் கலை அமைப்பு தகவல்

சென்னை: உலக கலாச்சார விழாவின் 4-வது பதிப்பு செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை வாஷிங்டனில் நடைபெற உள்ளது என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்களின் பார்வை வாஷிங்டன் டி.சி. மீது இருக்கும் காரணம் என்ன? பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் மறக்க முடியாத கொண்டாட்டத்தை வாழும் கலை, உலக கலாச்சார விழாவின் 4-வது பதிப்பாக செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை வாஷிங்டனில் நடத்துகிறது. உலக … Read more

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாவிட்டால் சிறை: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் சிறை செல்ல வேண்டியது வரும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் கலைச்செல்வி, உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் தாக்கல் செய்த மனு: அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் கடந்த 2001 முதல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நிர்வாக பிரச்சினை காரணமாக 2003-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். பின்னர் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தேன். … Read more

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக தொழில் துறை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் … Read more

“அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது” – ஜவாஹிருல்லா கருத்து

சென்னை: அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு … Read more

பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு: இனிப்பு வழங்கி நூதனப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இனிப்புகள் வழங்கி நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே டாஸ்மாக் கடை இயங்கிவந்தது. இக்கடையால் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகள் விற்கப்பட்ட பொருட்களுக்கு கிடைக்கும் பணத்தை மதுவுக்கு செலவிட வாய்ப்புள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுகொண்ட மாவட்ட நிர்வாகம் … Read more

‘‘எங்களின் நீண்டகால விருப்பம் இது’’ – பாஜக கூட்டணி முறிவால் மகிழ்ச்சியில் அதிமுகவினர்

மதுரை: ‘‘எங்களை மதிக்காத கட்சி எங்களுக்குத் தேவையில்லை, எங்கள் நீண்டகால விருப்பத்தை கட்சித் தலைமை செயல்படுத்தியிருக்கிறது’’ என்று பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் செயல்பாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாஜக இயக்கி வந்ததாகவும், அதன் கட்டுபாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரை டெல்லிக்கு அடிக்கடி சென்று, தங்கள் உள்கட்சி பிரச்சினையை பற்றி … Read more

அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலும், முறிந்தாலும் மக்களவைத் தேர்தலில் திமுகதான் வெல்லும்: உதயநிதி

கிருஷ்ணகிரி: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் சரி, முறிந்தாலும் சரி, திமுகவே மகத்தான வெற்றி பெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் தேவராஜ் மஹால் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடந்தது. இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியது: “இன்றைய தினம் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. களத்தில் இறங்கி … Read more

அதிமுக கூட்டணி முறிவு | “தேசிய தலைமை முடிவெடுக்கும்” – அண்ணாமலை ரியாக்‌ஷன்

கோவை: “அதிமுகவின் அறிக்கையைப் படித்தோம். தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசுவார்கள். சரியான நேரத்தில் பேசுவார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை கவுண்டம்பாளையத்தில் என்மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கோயம்புத்தூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறேன். அதிகமாக பேசுவதற்கு நமக்கு நேரம் இல்லை. … Read more