சிறந்த காளை ‘சின்னக்கருப்பு’, சிறந்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு – பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம்

மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு’ என்ற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர். பொங்கல் பண்டிகையையும் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழர்களுடைய வீரத்தையும், பாரம்பரியத்தையும் … Read more

சென்னையில் 17,000 போலீஸார் பாதுகாப்பு @ காணும் பொங்கல் – ட்ரோன் கேமராக்களில் கண்காணிப்பு

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சென்னை முழுவதும் 15,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் … Read more

”திருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை” – திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை என்றும் வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக் கொள்கைக்கான தேவை என்னவென்று கூறினால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போது மும்மொழிக் கொள்கைக்கான தேவை எதுவுமே கிடையாது. நம்முடைய … Read more

மாட்டுப் பொங்கல் தினத்தன்று விவசாயிக்கு அதிர்ச்சி! சிறுத்தை செய்த சம்பவம்..

Tamil Nadu News: மாட்டுப் பொங்கல் கொண்டாடி வரும் வேளையில், சிறுத்தையால் நேர்ந்த சம்பவத்தால் விவசாயிக்கு ஏற்பட்ட வேதனை. பொதுமக்கள் அச்சம். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர்.

நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று 16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகம், … Read more

“தமிழகத்தில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” – ஆளுநர் எக்ஸ் தள பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை

சென்னை: “தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்து அவரை சனாதனத் துறவி என்று தமிழக ஆளுநர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற … Read more

“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி திருவள்ளுவர்” – ஆளுநர் ரவி ட்வீட்டால் சர்ச்சை

சென்னை: காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க … Read more

காவி உடையில் திருவள்ளூர்… ஆளுநருக்கு முதல்வர் கொடுத்த அதிரடி பதிலடி – முழு பின்னணி

CM Stalin vs Governor RN Ravi: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி பதிவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டால் விழாக்கோலம் பூண்ட மதுரை: அவனியாபுரத்தில் களம்காணும் 1,000 காளைகள்

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல்களில் மொத்தம் 6 ஆயிரம் காளைகளை அவிழ்த்துவிட மாவட்ட நிர்வாகத்தால் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. நாளை(ஜன.16) பாலமேடு, நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு … Read more

10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்: தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி முதல் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 12, 13 தேதிகளில் 7,670 அரசு பேருந்துகளில் 4 லட்சத்து44,860 பேர் பயணித்துள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, தாமதமாகவே சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்க … Read more