முதல்வர், உதயநிதி குறித்து அவதூறு: இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது; தி.மலை, செய்யாறில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் கோட்டத் தலைவர் ஆகியோர் இன்று (செப்.25) கைது செய்யப்பட்டனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் 3-வது நாளில் இருந்து 5-ம் நாள் வரை, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக … Read more

23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது – பாஜக அண்ணாமலை விமர்சனம்!

23ஆம் புலிகேசி போல் தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் என பாஜக அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.  

கூடுதல் தகுதி; உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக்கூடாது!: ராமதாஸ்

சென்னை: கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற ஒரே அளவீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 1,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. கூடுதல் கல்வித் … Read more

18 வயது ஆகாத காதலிக்கு தாலி கட்டிய இளைஞர் – பிரித்துவைத்த பெற்றோர்… விபரீதத்தில் முடிந்த காதல்!

Tamil Nadu Latest News: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் காதல் மனைவியை பிரித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் 10 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு – ரூ.500 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என கணிப்பு

திருப்பூர்: மின் நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் , பரபரப்பு நேர கட்டணம் , சோலார் மேற்கூரை நெட்வொர்க் … Read more

விஜய் ஆண்டனி பட பாணியில் மனைவியை கொலை செய்த கணவர்! அதிர்ச்சிப் பின்னணி

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் காதல் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.   

வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தநிலையில் இந்த ரயில் சேவையை தென் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் சேவையால், … Read more

மதுரையில் பாதியில் முடிந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி – சொதப்பியது எப்படி?

மதுரை: போதிய முன்னேற்பாடு இன்றி மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று நடத்திய ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்ததால், பாதியிலேயே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மதுரை மாநகராட்சி சார்பில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி அண்ணாநகர் சாலையில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆடல், பாடல், சிலம்பம், தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் என பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரோனாவுக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். … Read more

நெல்லை – சென்னை எழும்பூர், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் உட்பட 9 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

புதுடெல்லி: நெல்லை – சென்னை எழும்பூர், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் உட்பட நாட்டின் 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். நாட்டின் அதிவேக சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. டெல்லி – வாரணாசி இடையே முதல் … Read more