“மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது சரியல்ல” – விஜய் மீது சீமான் விமர்சனம்

சென்னை: “மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல” என்று தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை சொல்லும்போது இதயத்தில் இருந்து வரவேண்டும். அதை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் எழுதி … Read more

ஆடு, மாடு பண்ணை வைக்க விருப்பமா? கால்நடை பராமரிப்புத் துறை முக்கிய அறிவிப்பு

tamilnadu goat cow farm setup training subsidy : ஆடு, மாடு  பண்ணை வைக்க விருப்பம் உள்ளவர்களுக்காக கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே

அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக

சென்னை: அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா ? உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை … Read more

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியமைக்க பாஜகவினருடன் மத்திய அமைச்சர், புதுச்சேரியில் இன்று ஆலோசனையில் நடத்தினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்படுவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக மாநில பொதுக்குழு கூடுகிறது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில சிந்தனை அமர்வு கூட்டம் ஹோட்டல் அண்ணாமலையில் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய தொழில் … Read more

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள்.. சொன்னீங்களே, செஞ்சீங்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். 

வானிலை முன்னறிவிப்பு: ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.16) ஒரு சில இடங்களிலும், நாளை மறுநாள் செப்.17-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், செப்.18, 19 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், செப்.20, … Read more

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்த விவசாயி

எனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரால் பரபரப்பு. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. 

வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சியருக்கான அதிகாரத்துக்குத் தடை உள்ளிட்ட, வக்பு சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 1) வக்புக்குச் … Read more

2.5 ஏக்கர் தோட்டம் வாங்க பெண்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

Nannilam scheme : பெண்கள் 2.5 ஏக்கர் தோட்டம் வாங்க இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.